உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தின் சிறப்பெழிலை உயிர்ப்பித்து, இயற்கை அழகை நம்முன் நடமிடக் காட்டி, பல் வண்ணக் காட்சிகளை நம் பார்வைக்குக்கொணர்ந்து பல்வேறு நிகழ்ச்சி களின் அணிவகுப்பைத் தொகுத்துரைத்துப் - பழம் பெரும்வாழ்வின் நாடித்துடிப்பை - நல்லோர் புகழ நாற்புறமும் சூழ்ந்த அந்நாள் நல்லறிவை இளங்கோ நமக்குக் காட்டுகிறார் - இக் காப்பியம் மூலம்! சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை - என் தம்பி கருணாநிதி - தனது 'வளமிகு செழுந் தமிழ்ச் சொல்திறத்தால்' நாடகமாகத் தருவது பொருத்த மானதே. கருணாநிதியின் - தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர் தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அத்திறன் - சிலப்பதிகாரத்தை உரிமையைத் தருகிறது. அவர் நாடக உருவில் ஆக்குவதற்குரிய அக்காவியத்தின் உயர்தரத்தை அப்படியே வைத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளை மாற்றியிருக்கிறார். நம்மால் விளக்கமளிக்க முடியா ததுபோலவும், நமக்குத் தேவை யில்லாதது போலவும் தோன்றுகின்ற சம்பவங்கள் சிலவற்றிற்குக் காரண காரியத் தொடர்புடையதும் நம்பத்தக்கதுமான மாற்றங்களைச் செய்திருக்கிறார். கருணாநிதி எழுதியுள்ள இந் நாடகநூலில் கிரேக்க வணிகன் எனும் பாத்திரம் வருகிறது. கோவலனை மாதவி தன் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் காட்சிக்கு அந்தப் பாத்திரம் ஒரு சாதனமாக - கருவியாக அமைகிறது. இது கோவலனின் செயலுக்குப் பொருத்தமான விளக்கமாகும்! கோவலன் மகிழ்ச்சியும் - களியாட்டமும் செல்லவில்லை. வேண்டி மாதவி வீட்டிற்குச் தமிழ்நாட்டின் பெயரைக் காக்க - தமிழ் அணங்கு, ஒரு கிரேக்கக் கிழவனின் கைப்பிடியில் வீழாமலிருக்கக் கோவலன் செயற்பட்டதாக அக்காட்சி அமைக்கப்பட் டிருக்கிறது! "தாங்கள் ஏன் ஒருமுறை மாதவியைச் சந்தித்து - அடைய முடியாத பொருளைப் பற்றி ஏங்காதே என அறிவுரை கூறி அவள் மனத்தை மாற்றக்கூடாது? விடுத்த இது மாதவி இல்லம் போக விரும்பாத கோவலனிடம் கண்ணகி வேண்டுகோள்! மாதவியின் அழகுதரும் நெறி மயக்கத்தால் எழுந்த உணர்ச்சிப் பிழம்பல்ல - கோவலனை மாதவியிடம் சேர்த்தது! கோவலன் மாதவியிடம் கலையின் குறைவில்லா நிறையுருவைக் கண்டான்; வேறொன்றையுமல்ல! கோவலன் தானே உருவாக்கிக் கொள்ளாத சூழ்நிலைதான் கோவலனை மாதவி இல்லத்திற்கு அழைத்துச் சென்றது. அவன் அறிவுரை கூற அங்கு சென்றான். ஆனால் இசை மயமான புது வாழ்வின் துணைவனாக அங்கே இருந்துவிட்டான். இன்னொரு முக்கியமான மாறுதல்; சிலப்பதிகாரத்தில் கண்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதியால் சிறப்புமிகு முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.