உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

% காட்சி -16 x மணிமேகறப்பு மாதவி வீடு [மாதவி வீட்டில் குழந்தைக்கு நன்னீ ராட்டு விழா... மிகக் குதூகலமாக நடைபெறு கிறது... குழந்தையைத் தொட்டிலில் இட்டு, மாதவியும் தோழியரும் பாடுதல். வரவே... பாட்டினிடையே...கோவலன் குழந்தையைத் தூக்கி, அவனிடம் தருகிறாள். அவன் குழந்தையை முத்தமிடுகிறான்.) மாத குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள்! கோவ: பெயரா?... [குழந்தையைப் பார்த்து] பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்த நற்கூட்டே! பொதிகைமலை விட்டெழுந்து, சந்தனத்தின் பூந்தாது வாரி வருகின்ற இன்பத் தென்றலே! குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ்சிரிப்பு! கோவலன் குலக் கொடியே; மங்கையர் இனத்துக்கு நீயோர் மணி! உன் காலசைவு கையசைவு எல்லாமே கலை! எல்லாம் மேகலை!... மேகலை!... மேலானகலை!- அதனால் நீ மணிமேகலை!... வாழிய மணி Gusail!... [மணிமேகலை என்ற பெயரை வைத்து அனைவரும் வாழ்த்துப் பாடுதல். கோவலன், மாதவி, வசந்தமாலை, எல்லோரும் தான தருமங்களை உற்சாகமாகச் செய்தல்! ஒரே கொண்டாட்டம்! கூத்து! பாட்டு..) (வீதியில் ஒரு மதங்கொண்ட யானை ஒரு மறையவரைப் பிடித்தல்... பலரும் ஓட்டம்! ஒரே அல்லோலம்! கோவலன் ஓடிவந்து மிகக் கஷ்டப்பட்டு யானையை அடக்கி வெற்றி பெறுகிறான். அனைவரும் கோவலனுக்கு மாலை யிட்டுக் கொண்டாடிப் புகழ்கிறார்கள்... மாதவி, ஓடிவந்து அணைத்துக்கொள் கிறாள்.]