உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் : ஓகோ ?... காவேரி மங்கை வளங் குறையாமல் இருப்பதற்குக் காரணம் அவள் கணவன் சோழனுடைய செங்கோலின் சிறப்புதான்! கணவன் பண்போடு நடப்ப தால்... காவேரி சிரித்து மகிழ்ந்து செழிப்புத் தருகிறாள். இதுதானே உன் பாட்டின் கருத்து?...அதாவது... காதலன் அன்போடு இருந்தால் காதலியும் அன்போடு இருப்பாள். எனக்கு உன்மீது அன்பு குறைந்தால்... உனக்கும் என்மீதும் அன்பு குறைந்து... பிறகு அந்த அன்பு வேறொருவனிட (குறுக்கிட்டு, கோபமாக] மாத: அத்தான் !... நன்றாயிருக்கிறது, நீங் கள் பாட்டுக்குப் பொருள் கூறும் அழகு!... [யாழைக் கீழே வைத்துவிட்டு எழுந்து போகிறாள்] கோவ: மாதவி ! [அழைத்தவாறு, பின்னால் போகிறான்) [மாதவி வேகமாகப் போ கிறாள்..."மாதவி, நில்" எனப்பின்னால் விரைகிறான் கோவலன்... அங்கே வலைகளுக்கிடையே ஒரு செம்பட வப் பெண் நின்றுகொண்டிருக்கிறாள். அவளைக் கோவலன் பார்க்கிறான், செம்படவப்பெண் கோலத்தில், மாதவியே மீன் உலரவைப்பது போல் தெரிகிறது அவனுக்கு! அப்படி ஒரு கற்பனை அவன் உள்ளத்தில் எழுகிறது.] கோவ: ஆகா ! தேன் நிறைந்த நீலோற்பலப் பூவின் தண்டுகளைக் கையிலேந்திப் புலாலை உண்ண வரும் பறவைகளை ஓட்டுகின்ற இந்தப் பாவையின் கண்களோ மிகக் கொடியன! ஆகா! பொழில் தரும் நறுமலர்! பழுதறு திருமொழி! முழுமதி புரைமுகம்! [மாதவி நின்று கவனிக்கிறாள். கோவலன் செம்படவப் பெண்ணை, மாதவி யெனக் கற்பனை செய்தவாறு] கோவ: அடடா...நகை நட்டு ஏதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள் ! புகை யொத்த கொடிபோல நெளிந்தாடும் உருவத்தாள்! இடையோ ஒருபிடிக்குங் காணாத இளம்பிடி! இதழ்களிலே தேன் ஒருபடி! இல்லை, இவ ளுக்கு குறையென்னும் புகழ்பெற்ற முல்லை!... பேச்சிலோ கிள்ளை! இவளை விடுமோ காதல் தொல்லை! [பாடுகிறான்] திரைவிரி தரு துறையே திருமணல் விரி இடமே... விரைவிரி நறுமலரே! மிடைதரு பொழிலிடமே- மருவிரி புரி குழலே மதிபுரை திருமுகமே ! இரு கயல் இணைவிழியே எனை இடர் செய்தவையே! [பாடிக்கொண்டு அருகே போகிறான். அருகே சென்றதும் அவள் மாதவி யல்லள்.. செம்படவப் பெண் என்று தெரிகிறது...அவ ளும் மிரண்டு வேறுபக்கம் போகிறாள்... அதுகண்ட மாதவி, அதிகக் கோபமுற்று வசந்தமாலையிடம் சென்று...] 8 மாத பார்த்தாயா-வசந்தமாலை ! வசந்த: பார்த்தேன்-பார்த்தேன்! மாதவி! ஊடலுக்கும் ஒரு அளவு வேண்டும்... மாத: அவருக்கு என்னைத் தவிர வேறு யாரி டத்திலோ விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதை அவரால் மறைக்க முடியவில்லை. உண்மை வெளிப்பட்டு விட்டது ... இருக்கட் டும், வேண்டுமென்றே நான் அவர் மனத்தை நோக வைக்கிறேன்! நானும் வேறொரு ஆட் வர்பால் காதல் கொண்டதுபோல் நடித்து.... வசந்த வேண்டாம் மாதவி! விளையாட்டு வினையாகிவிடப் போகிறது... மாத: அதெல்லாம் ஆகாது ... நீ போய்விடு; அவர் வருகிறார்! [அங்கே ஒரு வீரனுடைய சிலை இருக்கி றது. அந்தச் சிலையை மாதவி உற்றுப் பார்க் கிறாள். சிலை, கோவலன் சிலைபோலக் கண் ணுக்குத் தெரிகிறது; சிலையிலுள்ள வீரனுக்குரிய உடைகளுடன்] மாத காதல் தலைவரே! நீர் என்னை உண் மையான காதலோடு தேடி வரவில்லை; என் 6