உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-23 மாதவி துறவு தவிதுறவு மாசாத்துவான் வீடு ஓலை மாசாத்துவான் கையிலிருக்கிறது... (கோவலன் குரல்) "பேரன்புடையவரே! தங்கள் அடி தொழுது வணங்குகின்றேன். பெற்றோர்க் குப் பணி புரியாமல், உற்ற மனைவிக்கும் தீங்கு செய்து, பிழைப்பு நடத்த வெளியூர் செல்வதற்கும் நானே காரணமானேன். என் தவற்றால் வருந்தும் உங்கள் நெஞ்சத்தை ஆற்றிக் கொள்ள வேண்டுகிறேன். இங்ஙனம் உங்கள் அன்பு, [மாசாத்துவான் பெருமூச்சு... அப்போது மாதவி... மணிமேகலையுடன் வருகிறாள். நாலைந்து பெண்கள் தட்டுகளில் பொற்காசுகளை நிரப்பிக்கொண்டு வரு கிறார்கள்.] மாசாத்துவான்: யார்? மாதவி: மன்னிக்கவும்... தங்கள் பெருமை வாய்ந்த குடும்பத்தின் சீரழிவுக்குக் காரண மான பாதகி...மா தவி நானே தான்! இதோ! எனக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் குவிக்கப்பட்டிருந்த தங்கள் வீட்டுச் செல் வம். ஏற்றுக் கொள்ள வேண்டும். மாசாத் : என்ன மாதவி...நீ மாற்றுக் குறை யாத பசும் பொன் என்று இப்போதே உணர்ந்தேன்! மாதவி: இனி யார் உணர்ந்தென்ன உணரா விட்டால் என்ன? நான் உதிர்ந்த மலராகி விட்டேன்! மாசாத் : மாதவி! இந்தப் பொற்குவியல் என் மகன் உனக்காக அளித்தது. இதை நான் தீண்ட மாட்டேன்... திரும்பப் பெறுவது தீங் கானது. மாதவி: எனக்கு ஏன் பொருள்? என் அன்புச் செல்வமே பறிபோய் விட்ட பிறகு...அழி கின்ற இந்தச் செல்வம் எதற்காக? எங்கே...என்னை மன்னித்தேன் என்று ஒரு முறை சொல்லுங்கள்! மாசாத் : மாதவி...நீ என் அன்பு மருமகள்! மாதவி: அய்யோ... மணிமேக!ை எவ்வளவு நல்ல குடுமபத்தை உன் தாய் நாசமாக்கி விட்டாள் பாரம்மா! பாரம்மா!! [அழுகிறாள்] மாசாத் : அழா தேயம்மா... எங்கே, குழந்தை யைக் கொடு! [குழந்தையை சிரிக்கிறது... அவர் தேங்குகிறது.) வாங்குகிறார். குழந்தை கண்களிலும் கண்ணீர் 49