உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி காட்சி -38 சிலைக்குக் கல் இமயத்தில் - குயிலாலுவம் [சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜய ருக்கும் நடைபெற்ற போரில், செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்.) சேரன்: வில்லவா! வெற்றி முழங்கும் இந்த இடத்திற்குப் பெயர் என்ன? வில்லவன்: குயிலாலுவம். சேர: குயிலாலுவம், குறித்துக்கொள்! இந்தப் பாறைகள் அனைத்தும் பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள். வெற்றி மட்டும் போதாது வில்லவா, அந்த வீணர்களை விடக்கூடாது! காஷாய உடையிலே ரிஷிகளைப் போல் எங்கோ ஓடி விட்டார்களாம் விஜயர்கள். வில்: கனக சேர: இது புதுமையல்ல, அவர்களுக்கு உரிய தான ஒரே பழக்கம் அதுதான். [கனக விஜயர்கள் முனிவர் உடையில் கொண்டுவரப்படு கைது செய்யப்பட்டுக் கிறார்கள்.] சேர: யார் இவர்கள்? வில் கனக விஜயர்! சேர : கனக விஜயர்! கனக விஜயர்! ஆகா வீராதி வீரர்களே, நன்றாக இருக்கிறது போர்த்திறமை! முதுகு காட்டுவது -முக்காடு போடுவது-மறைந்திருந்து தாக்குவது மகானாய் மாறுவது! அமைதியான முனிவர் வேடத்தில் இருக்கிறீர்களே; இதற்குப் பதில் தாம்பா சொல்லுங்கள்! புராணத்திலே யுத்தம் எவ்வளவு நாள் நடந்தது? கன: பதினெட்டு ஆண்டுகள். சேர : ராம ராவணப் போர்? கன : பதினெட்டு மாதங்கள். சேர: பாரதப் போர்? கன : பதினெட்டு நாட்கள். தேவாசுர சேர: வீரர்களே! நினைவிருக்கட்டும், சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே நடத்தியபோர் பதினெட்டே நாழிகையில் முடிந்துவிட்டது! கன : மன்னவா, மண்டியிடுகிறோம். மன் னித்து விடுங்கள். சேர: மன்னிப்பதா? நான் மன்னிப்பதா?' தமிழ்நாட்டு மண்ணில் வந்து மண்டி யிடுங்கள். அது உங்களை மன்னிக்கட்டும். வில்: மன்னவா, தமிழகம் திரும்ப வேண் டாமா? புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றனவே. சேர: புறப்படுவோம் - வில்லவா ; அதற்குள் கண்ணகிக்குச் சிலை நாட்ட இங்குக் கல் எடுக்க வேண்டுமல்லவா? வில்: ஆமாம். கனக- சேர: அந்தக் கல்லைச் சுமப்பதற்குச் சரியான எருதுகள் கிடைத்து விட்டன. விஜயா, தமிழரின் வீரத்தின் மீது வீசினாய் ஒரு சொல்; இப்போது தூக்கு கல்! வீரர்கள் : சேரன் செங்குட்டுவன் வாழ்க!

164596 5000. வஞ்சிமூதூரில் கண்ணகி சிலை நாட்டு விழா ங்குட்டுவன், இலங்கைக் கயவாகு முதலிய மன்னர்களும், •600ங்கோவடிகள், சாத்தனார் முதலிய புலவர்களும் நிற்கிறார்கள். மாதவி, துறவுக் கோலத்தில், கண்களில் நீர்வழிய, குழந்தை மணிமேகலையைக் கொண்டுவந்து சிலையின் காலடியில் வைக்கிறாள்.] 0-2NKRI, C 267