பக்கம்:சிலம்பின் கதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சிலம்பின் கதை



அந்தணன் தானம் பெற வருகிறான். அவனை யானை ஒன்று தூக்கிச் செல்கிறது. அதனோடு மோதி அவனை மீட்கிறான். 'கருணை மறவன்' என்று பாராட்டப்படுகிறான். அவனுக்கு வேண்டிய தானமும் தருகின்றான். யானையிட மிருந்து மீட்டது வீரம் என்று கூறமுடியாது. மறச் செயல் என்றுதான் கூறப்படும்.துணிந்து ஆற்றும் வலிமைச் செயல்: அதனால் அது மறம் எனக் கூறப்படுகிறது. உயிரைத் துணிந்து தர முற்படுகிறான்; எனவே இதுவும் கொடைத் திறத்தின்பால் படும் என்று கூறலாம்.

மற்றும் பொய்க்கரி புகன்றவனை மீட்கச் சதுக்க பூதத்தின் பாசத்தில் அகப்படத் தன்னை அளிக்க முன் வருகிறான்; இதுவும் கொடைத் திறம் என்று கூற வேண்டும். அவன் குடும்பத்துக்குப் பெரு நிதி அளிக்கிறான்.

மற்றும் பார்ப்பனன் ஒருவன் எழுதித் தந்த வடமொழி வாசகம் அதை விலை கொடுத்து வாங்கித் தானம் செய்கிறான்; அவர்கள் குடும்பத்துக்கு நிதி. வழங்குகிறான்.

இம்மூன்று செயல்கள் அவன் புகழ் உடையவன் என்பதற்குச் சான்றுகளாக இடம்பெறுகின்றன.

இவன் வணிக மகன்; செல்வச் சிறப்பு இவனுக்குப் பெருமை தருகிறது. ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து மாதவி மாலையை வாங்கி அவளை அடைகிறான். இவன் இன்பம் நாடிச் செல்வது இவன் போக்கு எனத் தெரிகிறது.

நகர நம்பியர் திரிதரு மன்றத்தில்தான் கூனி இவனைச் சந்திக்கிறாள். எனவே அவன் அங்கு எப்பொழுதும் திரிந்து வந்தவன் என்று தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/203&oldid=936524" இலிருந்து மீள்விக்கப்பட்டது