பக்கம்:சிலம்பின் கதை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சிலம்பின் கதை



சேரனைச் சந்திக்கின்றனர். அங்கேயும் அங்குள்ள அந்தணர்களைப் போற்றுக என்று அறிவுரை கூறப்படுகிறது. இறுதியில் மாடல மறையோன் உரையின்படி வேள்வியில் கதையை முடிப்பது சமயச் சார்பின் தாக்கம். அக்காலப் போக்கும் என்று கூற வேண்டியுள்ளது. மாடலனுக்குத் துலாபாரம் புகுந்து செங்குட்டுவன் பொன்தானம் தருகிறான்.

இளங்கோவடிகள் சாதனை என்று கூறக் கூடியது தமிழ் உணர்வுக்குத் தலைமை தந்தது; மூன்று நாடுகளை இணைத்துக் காட்டியது. தமிழ் மன்னரை இகழ்ந்தவர்களை எதிர்த்து அவர்களை அடிமைப்படுத்தியது. தமிழகத்தை அவர் நேசித்து இருக்கிறார். வடவேங்கடம், தென்குமரி இடைப்பட்ட தமிழகம், அதில் அவர் கொண்டிருந்த காதல், காவிரி, வைகை, பொருநை இவற்றில் வைத்திருந்த மதிப்பு, நாட்டு வாழ்க்கையை நூல் முழுதும் புகுத்தும் திறன் அனைத்தும் அவரை ஒரு தேசியக் கவிஞர், நாட்டுப் பற்றுடைய கவிஞர் என்று உயர்த்திக் காட்டுகின்றன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று இவற்றை ஊட்டுவதில் இக்காவியம் தலை சிறந்து விளங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/233&oldid=936556" இலிருந்து மீள்விக்கப்பட்டது