பக்கம்:சிலம்பின் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

29


விழா அழைப்பு

வச்சிரக் கோட்டம் என்பது இந்திரன் கோயில்; அதில் இருந்த முரசத்தை எடுத்து யானையின் பிடரியில் ஏற்றி வைப்பர். அதன் மீது இருந்து விழாச் செய்தியை ஊருக்கு அறிவித்தனர்.

கால்கோள் விழா இது தொடக்க விழா, கால்கோள் விழா முதல் கடைநிலை நிகழ்ச்சி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பற்றி நவின்றனர். மங்கல நெடுங்கொடி எடுத்து ஏற்றினர்.

நகரத்து மாளிகை முன் எங்கும் தோரணங்கள் தொங்கவிட்டனர். பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர். பாவை விளக்கும், கொடிச் சீலையும், வெண்சாமரமும், சுண்ணமும் ஏந்தி விதிகளில் பொலிவு ஊட்டினர்.

நீராட்டு விழா

ஐம்பெரும் குழுவினரும், எண்பேராயத்தினரும், அரச குமரரும், வணிக இளைஞரும் தத்தமக்கு உரிய தேர்களில் ஏறிச் சென்று, “அரசன் வெற்றி கொள்வானாக” என்று, வாழ்த்துக் கூறி இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்தினர். குறுநில மன்னர்கள், குடங்களில் காவிரிநீர் கொண்டுவந்து இந்திரனுக்கு மஞ்சனம் ஆட்டி நீர் முழுக்குச் செய்வித்தனர். இந்த நீராட்டுதலே தலைமை விழாவாகக் கருதப்பட்டது. அதனால் இது நீராட்டு விழா எனவும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

ஊர்த்திருவிழாக்கள் மற்றும் சிவன்கோவில், முருகன், பலராமன், திருமால் இக்கோவில்களில் அவரவர் மரபுப்படி பூசைகள் நடத்தினர். தேவர்க்கும், பதினெண் பூத கணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/30&oldid=960887" இலிருந்து மீள்விக்கப்பட்டது