பக்கம்:சிலம்பின் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கானல் வரி

43


வர்கள்” என்று சாடுகிறாள். அப்பாடல்கள் கருத்துகள் பின்வருமாறு;

"முத்துகள் தந்து எங்களைத் தலைவன் மயக்க விரும்புகிறான்; அவை அவள் பல்லுக்கு நிகராகா, கடல் அலைகள் கரை சேர்க்கும் முத்துகளே எங்களுக்குப் போதுமானவை; அவன் கையுறை தேவை இல்லை” என்று தோழி கூறி மறுத்துவிடுகின்றாள். இது தோழியின் கூற்றாக அமைகிறது.

“களவில் வந்து கலந்தான்; அவன் பிரிந்ததால் தலைவி மெலிந்தாள். அவள் கைவளையல்கள் கழன்று விழுந்து விடுகின்றன”.

“கள் உண்டால் மயக்கம் வரும் என்று எங்களுக்குத் தெரியும்; காமம் கொண்டால் அதுவும் நோய் தரும் என்பதை இப்பொழுதுதான் அறிகிறோம்” என்கிறாள் தோழி. இவை இரண்டும் தோழியின் கூற்றுகள் ஆகின்றன.

இனிப் பாடுவன தலைவியின் கூற்றுகள்:

“நண்டும் அதன் பெண்டும் மகிழ்ந்து உறவாடும் காட்சியைத் தலைவன் காண்கிறான்; பிறகு அவன் என்னை யும் பார்க்கிறான். அவன் மனக்குறிப்பு யாது? எனக்கு விளங்கவில்லை”

“தம்முடைய தண்ணளி; தாம்; அவர் குதிரை பூட்டிய தேர் இவை எல்லாம் இப்பொழுது என்ன ஆயிற்று? எம்மை அவர் மறந்துவிட்டார்; அவர் எம்மைவிட்டு அகலலாம்; யாம் மட்டும் அவரை மறக்கவே மாட்டோம்; நம்மை மறந்தவரை நாம் மறக்க மாட்டோம்”

“நெய்தல் பூவே உன் கனவினில் அவர் வந்தால் என்னைப் பற்றி ஒரு சொல் உரைக்க மாட்டாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/44&oldid=963713" இலிருந்து மீள்விக்கப்பட்டது