பக்கம்:சிலம்புத் தேன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 61

டாக்டர் சுப. மாணிக்கம் அவர்கள் சிலப்பதி காரத்தையும் மணிமேகலையையும் மிக அருமை யாகப் பதிப்பித்துக் காரைக்குடிச் செல்வி பதிப்பக வெளியீடாக வழங்கியுள்ளார்கள். இரு பெருங் காவியங்களின் மூலம் மட்டுமே இப்பதிப் பில் அடங்கியுள்ளது எனினும், பதிப்புத் தமிழ் மரபினின்றும் சற்றும் பிழையாது மிகவும் பயன் தரத்தக்க முறையில் அமைந்துள்ளது. இப்பதிப்பிற்கு உயிர்ாய் விளங்குவது நூலின் முகப்பில் சிலப்பதிகாரத்திறம் என்ற தலைப் பில் டாக்டர். சுப. மாணிக்கம் அவர்கள் சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்னும் உண்மையைக் கம் நுண்மாண் துழைபுலத் தால் இனிது ஆராய்ந்து வரைந்துள்ள அரிய ஆராய்ச்சிக் கட்டுரையே ஆகும். இப்பதிப்பின் அருமையைக் காண்போர் யாவரும் டாக்டர். சுப. மாணிக்கம் அவர்கள் பழந்தமிழ் இலக்கி யங்கள் யாவற்றையும் இவ்வாறே பதிப்பித்து உதவ வேண்டும் என்று விழைதல் இயல்பே.

செந்தமிழ்க் காவியமாம் சிலப்பதிகாரத் தின் புகழ் அலை கடலுக்கும் அப்பால் பரவி, கடல் கடந்த நாடுகளிலும் அடியார்களைப் பெற் மறுள்ள அருமை பெருமைக்கு உரியது. பேரா சிரியர். வி. ரா. தீட்சிதர் அவர்களின் சிலப்பதி கார ஆங்கில மொழி பெயர்ப்பிற்கு அரிய தொரு முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார் பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர் ஜூலிஸ்பிளாக்கு இules Block) என்பவர். இருபது ஆண் இகட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/70&oldid=560623" இலிருந்து மீள்விக்கப்பட்டது