பக்கம்:சிலம்புத் தேன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 翰器

ஆராய்ச்சி நூல் வெளியிட்டுள்ளார். 568 பக்கங் களேக் கொண்ட அப்பெருநூலில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை வாசக ராக (Reader) இருக்கும் அப்பெரியார் தமிழ் இலக்கியம் பற்றி 15 பக்கங்களில் ஒரு கட்டுரை. வரைந்துள்ளார். கருத்து வேறுபாட்டுக்குரிய சில கருத்துக்கள் அக்கட்டுரையில் இருப்பது உண்மையே. எனினும், சிலம்பின் சிறப்புப் பற்றி அவர் ஒன்பது சிறந்த கருத்துக்களைக் குறித்துள்ளார். அவை வருமாறு: (1) தமிழ்ப் பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமே பழையது; பெரியது. (2) வடமொழிக் காவியங் கட்கும் இதற்கும் மிகுந்த வேற்றுமை இருக் கிறது. (3) கற்றவர்கட்காகச் செந்தமிழில் வரையப் பெற்றதேனும், இக்காவியம் மக்கள் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. (4) வருந்தற்குரிய சூழ் கிலேயில் சிக்கிய இரு சாதாரண மக்களின் வாழ்வைக் கூறும் இக் காப்பியம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உண் மை வாழ்க்கையின் விளக்கம். (5) வடமொழிக் காப்பியங்கள் போல ன் றி, சிலப்பதிகாரம் உண்மையான அவலச் சுவை உடையதாய் உள்ளது. (6) தமிழ் மக்களால் இக்காப்பியம் தேசியக் காப்பியமாகக் கருதப்படல் சரியே. (7) காப்பியத்தின் கொடு முடியாய் விளங்கும் ஆய்ச்சியர் குரவை, துன்பமாலே, ஊர்சூழ்வரி, வழக்குர்ை காதை, வஞ்சின மாலை, அழற்படு காதை முதலிய பகுதிகள்-இந்திய இலக்கியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/72&oldid=560625" இலிருந்து மீள்விக்கப்பட்டது