பக்கம்:சிலம்புநெறி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 79

கண்ணகி இந்த அறங்களைக் கோவலன் பிரிந்திருந் தாலும் செய்ய வசதி உண்டு. ஆனால் கண்ணகி. செய்யவில்லை.

ஏன்? கணவன் இல்லாதபோது மனைவி அறம் செய்தல் கற்பு நெறியன்று. இது மட்டுமா? கண்ணகி கற்புக்காக, கோவலனின் புகழைக் காப்பதற்காக உள்ளத்தின் துன்பத்தினை மறந்து கோவலனின் பெற்றோரிடமும், அவர் தம் வீட்டுக்கு வரும் சான்றோரி டமும் செயற்கையாகப் புன்முறுவல் பூக்கின்றாள்.

ஏன்? கோவலனை விவாதப் பொருளாக்கி, சீரழியச் செய்யக்கூடாது என்ற கற்பு நெறிதான்் காரணம்.

கண்ணகி கோவலனைப் பிரிந்து வாழ்ந்த நிலை யிலும் தம் கற்பினையும் காத்துக் கொண்டாள்; கோவலனுக்குரிய எந்த நலன்களையும் இழக்காமலும் பேணிப் பாதுகாத்து வந்தாள். அதுபோலவே கோவலனின் பெருமையையும் புகழையும் கெடுக்கும் எந்தச் செயலிலிருந்தும் தன்னை விலக்கி, காத்துக் கொண்டாள். இதுவே பெண்ணின் கற்பு-பெருமை . கண்ணகி போற்றத்தக்கவள்.

கண்ணகி கோவலனுக்கு ஏற்ற மனைவி என்ற தகுதி மிகுதியும் உடையவளாக இருந்தாள் என்பதனை தேவந்தியும் உணர்த்துகிறாள். கோவலன், கண்ணகி யைப் பிரிந்ததற்குக் காரணம் கண்ண்கியல்லள்.

கோவலன் கண்ணகியை வெறுத்து ஒதுக்கவில்லை என்பதைக் கணவற்குக் கைத் தாயுமல்லை என்று தேவந் தி கூறி விளக்குகிறாள். இங்ங்னம் இருக்க, கண்ணகியிடம் கலை இல்லை; கவர்ச்சியில்லை, அதனால் கோவலன் பிரிந்தான்் என்றெல்லாம் கருதுவது மரபன் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/81&oldid=702744" இலிருந்து மீள்விக்கப்பட்டது