பக்கம்:சிலம்புநெறி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 81

ஒரே வார்த்தையில் நறுக்குத் தெரித்தாற் போல் 'பீடன்று' என்று கூறி மறுத்துவிட்டாள். இந்த இடத் தில் தேவந்தியின் ஆலோசனையை ஒரே வார்த்தையில் கண்ணகி மறுத்துப் பேசுவானேன்?

ஒரு துன்பத்தில் வருந்துவார்க்குப் பலர் எளிதில் ஆலோசனைகள் கூற வருவர். அந்த ஆலோசனைகள் பெரும்பாலும் தன், மதிப்பை இழக்கக் கூடியதாகவும் நெறிமுறைகளைக் கடந்ததாகவுமே இருக்கும். ஆயினும், தன்னல நயப்பு, தேவை என்ற அடிப்படையை வைத்து, காது கொடுக்கத் தொடங்கிய நிலையிலிருந்து முற்றாக மாறிவிடுவர்.

இராமகாதையில் வரும் கூனி, கைகேயியின் மனத்தை மாற்றியதை நினைவு கூர்க.

இதன் தொடர்பாகத் தொடர்ந்து தேவந்தியிடம் பேசுவதால் தன் மனம் நெறிகளைக் கடக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஒரே சொல்லில் பீடன்று” என்று கூறி மறுத்து விடுகிறாள்.

காதல், கற்பு என்பன இன்பத்திற்கும் களிப்பிற்கும் மட்டுமே உரியவை அல்ல. தன்னல மறுப்பிற்கும், தம்மைச் சார்ந்தாரைக் காத்தற்கும் காதலும் கறபும் பயன்படும் பொழுது தான்் அறம் ஆகிறது; இறைமை ஆகிறது. - .

அதனால், தமிழ்ப் பெண்டிர் தத்தம் கணவனின் தவறுகளை நெஞ்சத்தாலும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று ஐங்குறுநூறு எடுத்துக் காட்டும். கண்ணகி பெண்ணிற் பெருந்தக்காள். கண்ணகி தன் கணவனின் தவற்றைக் காமவேளிடம் சொல்ல எங்ங்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/83&oldid=702746" இலிருந்து மீள்விக்கப்பட்டது