பக்கம்:சிலம்புநெறி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கண்ணகி, கோவலனின் குறைகளையும் நிறைகளை யும் தேர்ந்து தெளிந்தவள். ஆதலால், கள்வன்', என்று கோவலன் பழி சுமத்தப்பட்டபோது. பாண்டிய அரசுதான்் தவறு செய்துவிட்டது என்று ஐயத்திற்கு இடமின்றித் துணிகிறாள். +

இத்தகைய சால்பு, பழகிய பலரிடத்தில் காண்பது அரிது. அவர்கள் இயல்பில் குற்றம் காண்பவர்கள். எனவே, "இல்லாமலா இருக்கும். அல்லது இருக்குமோ?” என்று ஐயப்படுவார்கள். கண்ணகிக்கு ஐயத்தின் அடிச் சுவடேயில்லாத நம்பிக்கை கோவலனிடத்தில்!

கோவலன், தன்னைப் பிரிந்து துன்புறுத்தினானா யினும், அவள் அத்துன்பத்தைத் தாங்கி, தவம் செய் தாளே தவிர, கோவலனுக்கு இம்மியும் நெஞ்சத்தாலும் தவறிழைக்கவில்லை. தான்் தவறிழைக்காததோடு, மற்றவர் தவறிழைத்த பொழுது தான்், அத் தவற்றை, தாங்கமுடியாது சினந்து எழுகின்றாள்.

பூம்புகாரில், ஆழ்கடலின் அமைதி போலிருந்த கண்ணகி, மதுரை நகரில் சினந்து எழுகிறாள்; எரிமலை யெனக் குமுறுகிறாள். பூம்புகாரில் கோவலன் மாதவி ஆகியோர் தனக்கிழைத்த தீமையைத் தாங்கிக் கொண் டாள். ஆனால், மதுரையில் தன் கணவன் கோவலனுக்கு இழைத்த தவற்றை அவளால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை,

கண்ணகியின் தன்னல மறுப்பும் கோவனுக்காகவே வாழ்ந்த தியாக உணர்வும் இதனால் புலப்படுகின்றன. கோவலன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அவள் நெஞ்சத்தில் குமுறல் எழுந்தது கொலையால் அல்ல; பழி தூற்றலாலேயாம். இதனை, .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/88&oldid=702751" இலிருந்து மீள்விக்கப்பட்டது