பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சுந்தர சண்முகனார்



தால், பின்னால் நிகழ்ந்ததை அறிந்து முன்னோட்டமாக முன்னாலேயே எழுதிச் சுவை தந்துள்ளார். இது மட்டுமா?

உலவாக் கட்டுரை

மனையறம் படுத்த காதையில், கோவலனும் கண்ணகியும் இன்புற்றிருந்த வாழ்க்கையைத் தொண்ணூறு (90) அடிகளால் தெரிவித்துள்ளார் இளங்கோ, இந்தத் தொண்ணூறு அடிகளில் நாற்பத்தைந்து அடிகள், கோவலன் கண்ணகியைப் பாராட்டிய அடிகளாகும். இந்தப் பாராட்டு ‘எவரெஸ்ட்’ உச்சிக்குப் போய் விட்டிருக்கிறது. இவண் இறுதிப் பகுதியை மட்டும் காணலாம்:

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலைகிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி”
(2:73-81)

என்பது தான் அந்தப் பாராட்டு. இரண்டாம் காதையின் இறுதியில் இவ்வாறு அமைத்தது, அடுத்த காதையிலேயே கோவலன் (45 அடி) கண்ணகியைப் பிரியச் செய்துவிடுவதால் தான். இவ்வாறு பாராட்டியவன் அடுத்த காதையிலேயே பிரிந்து விடுவது பின்னுக்கு உரிய முன்னோட்டச் சுவை பயக்கிறதன்றோ?

இந்த மனையறம் படுத்த காதையின் இறுதியில் ஒரு தனி வெண்பா உள்ளது. இது முற்றிலும் முன்னோட்டப் பாடலாகும். ஆண் பாம்பும் பெண் பாம்பும் ஒன்றோடு ஒன்று உடலைப் பின்னி முறுக்கிக் கொண்டு இன்பம்