பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

சுந்தர சண்முகனார்


“கோவலன் சென்று கொள்கையின் இருந்த
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த அறியாத்
தேயத்து ஆரிடை உழந்து

சிறுமை யுற்றேன் செய்தவத்தீர் யான்” (15-20)

என்பது பாடல் பகுதி. மற்றும் ஒன்று வருக:-

கனாத் திறம் உரைத்த காதை

மாதவி பால் வெறுப்பு கொண்ட கோவலன் அவளைப் பிரிந்து கண்ணகியிடம் வந்தான். படுக்கை அறையில் அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்திக் கூறுகிறான். என் அருமைக் கண்ணகியே வஞ்சகியாகிய மாதவியோடு இந்நாள் வரை இருந்து என் முன்னோர் ஈட்டிய மலையத்தனை செல்வத்தையும் இழந்து விட்டேன். எனது இழி செயலால் ஏற்பட்ட வறுமைக்காக இப்போது மிக்க நாணம் கொள்கிறேன் - என்று கூறி வருந்தினான்;

“காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடமை சேக்கையுள் புக்குத்தன் பைங்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த

இலம்பாடு காணுத் தரும் எனக்கு என்ன” (65-71)

என்பது பாடல் பகுதி. கவுந்தியடிகளிடம் தன் தவறை ஒத்துக்கொண்டான், தன் மனைவியிடமும் தன் தவறை ஒத்துக்கொண்டுள்ளான்.

தெரியாமல் இன்ன தவறைச் செய்து விட்டேனே - என்று பின்பு வருந்தும் படியான செயலைச் செய்யலாகாது;