பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

சுந்தர சண்முகனார்


பட்டிருப்பது ஏன்? - என்று கேட்டேன். அதற்கு அவர் இறுத்த விடை விளக்கமாவது:

எங்கள் இனத்தவர்கள் காவிரிப்பூம் பட்டினமாகிய புகாரிலிருந்து வந்தவர்கள். புகாரைக் கடல் கொண்டு விட்டதாலும், எஞ்சியிருந்த பகுதியில் வீடுகளில் இருந்த பொருள்கள் நனைந்து கெட்டு விட்டதாலும், நீர் அச்சம் மிகுந்த கடற்கரைப் பகுதியில் வசிப்பதை வெறுத்து, நீர் அச்சம் இல்லாத மேட்டுப் பாங்கான இப்போதுள்ள இடத்திற்கு வந்து விட்டனர். வெள்ளம் வரலாம் என்ற தண்ணீர் அச்சத்தால், பல படிகள் அமைத்த அடித்தளத்தின்மேல் வீடுகளைக் கட்டினர் - என்பது அவர் தந்த விளக்கம். இந்தக் கருத்தைப் பற்றி மற்ற செட்டிமார்கள் என்ன எண்ணுவார்களோ - தெரியாது. எதுவோ - எப்படியோ? பதியெழு வறியாப் பழங்குடி நிலைஇய புகார் என்னும் இளங்கோவின் கூற்று ஏமாற்றத்திற்கு இடமாகி விட்டது. ஆனால் இயற்கையின் திருவிளையாடலுக்கு இளங்கோ பொறுப்பாளர் ஆகார்.

தேவர் (சொர்க்க) உலகத்தையும் நாக நாட்டையும் ஒத்த இன்பமும் புகழும் பொருந்தியதாம் புகார்.

"நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
போகம்மீள் புகழ்மன்னும் புகார் நகர்" (1:21,22)

என்பது பாடல் பகுதி. புகார், அரசரும் விரும்பும் மிக்க செல்வம் உடைய வணிகர் மிக்கது: உலகம் முழுவதும் வரினும் விருந்தோம்பி வேண்டியதைத் தரக்கூடிய வளம் உடையது. கப்பல் வாயிலாகவும் கால்நடை முதலிய வேறுவகையிலும் பல நாட்டுப் பொருள்களும் வந்து குவிவதால் பல நாடுகள் ஒன்று சேர்ந்திருப்பது போன்றது.

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குவியல் நிறைந்த புகார் நகரில் மாலை கழிந்தும் வாணிகம் நடக்கும் வாணிகத்