பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

சுந்தர சண்முகனார்



“மல்லல் மாஞாலம் இருளூட்டி மாமலைமேல்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென் றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்.
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்”

(19:31 – 38)

என்பது பாடல் பகுதி. கொலைக் களக் காதையில், கோவலன் மாலையில் கொலையுண்டதாகக் கருத்து கொள்ளும்படிப் பாடியுள்ள இளங்கோவடிகள், ஊர் சூர் வரிக் காதையில், காலையில் கோவலனிடம் மலர் பெற்றுத் தழுவி வந்த கண்ணகி, மாலையில் அவனது பிணத்தைக் கண்டு அரற்றினாள் என்று கூறியிருப்பது கால முரண் - வழுவாகும்; இந்த வகையில், சிலப்பதிகாரம் பிழையுடையது எனச் சீராமுலு ரெட்டியாரும் மு. கு. சகந்நாத ராசாவும் கூறியுள்ளனர்.

சிலம்பில் பிழையா?

இந்தச் செய்தியை, திருவனந்தபுரம் - கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியராகிய திரு ஆர். வீரபத்திரன் என்னும் அறிஞர், தமது ‘பிழையிலாச் சிலம்பு’ என்ற நூலில் தெரிவித்துள்ளார். சகந்நாத ராசா எழுதியுள்ள ‘சிலம்பில் சிறு பிழை’ என்னும் நூலுக்கு மறுப்பு நூலாகும் இது.

மற்றும், வீரபத்திரன் தமது நூலில், டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்களும், தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களும், ம. பொ. சிவஞானம் அவர்களும் காலமுரண்