உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலுவையில் மாண்டவர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பு - நவம்பர் 14, 1959 44 ஏன் ? ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் படிக்க எத்தனை நூல்கள்! எவ்வளவு அருமையானவை அப்பா! தமிழ் தெரிந்த குழந்தைகளுக்கும் நூல்கள் வேண்டும். அதே தரத்தில் வேண்டும். இது மற்றவர்களுக்குச் சொல்லி நடப்பதல்ல. நீங்களே எழுதிக் காட்டி விடுங்கள். முதலில் சாக்ரடீசு, இயேசு, காந்தி ஆகியவர்கள் வாழ்க்கையை எழுதுங்கள் என்று கட்டளை யிட்டான் என் மகன், கா. சு. திருவள்ளுவன், இது ஓராண்டிற்கு முன். விளைவு உங்கள் முன். 99 இப்போது வெளியாகும் ஐந்து நூல்களையும் அவனுக்குப் படித்துக் காட்டினேன். அவன் ஆங் காங்குத் திருத்தினான்; செம்மைப் படுத்தினான். உள்ள படங்கள் பல அவன் யோசனையில் பிறந் தவை. இதில் வரும் கருத்துக்கள் அரசினர் கருத்துக்கள் அல்ல. இவற்றிற்கு நானே பொறுப்பு. இந் நூல்களை நிறையப் பயன் படுத்துங்கள் படிப்பின் போக்கிலே புதுத் திருப்பத்தைக் காணுங்கள். தமிழருக்குப் பெருந்தொண்டு செய்யுங்கள். நெ.து.சு Augengung. 14-11-'59 ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை-5