பக்கம்:சிலை பேசிற்று.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 172 சிலை பேசிற்று இராவணனும் அப்படியே. அரக்கர் குலத்துக்கே இந்தப் போர்தான் ஊழி வெள்ளம். அந்த வெள்ளத்தினின்றும் கரையேறுவது நீ மட்டும் தான். அரக்கர் குலத்துப் பிதிர்க்கடனைச் செய்ய நீயாவது மிஞ்சினாயே ! - விபீ : (கவலையுடன்) அண்ணா ! கற்ப : என்னை அண்ணா என்று அழைக்காதே. நீ இராமனுடன் சேர்ந்த அன்றே என் உடன்பிறப்புச் செத்து விட்டது. விய : என்ன ?... கும்ப : ஆம். இராமன் தரும் இலங்கா சாம்ராஜ்யத்தை - நீயே ஆண்டுகொள்! வீd : (பதில் சொல்லாமல் - கண்ணீ ர் சொரிந்து நிற் கிறான்) (தூரத்தில் எங்கோ போர்முரசும் சங்கும் ஏங்கி ஒலித்து மடிகின்றன, கும்பகர்ணனை விட்டுப் பிரிந்து செல்லும் விபீஷணனின் உருவம் தூரத் தில் மங்கி மறைகிறது.) - திரை - 1942

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_பேசிற்று.pdf/169&oldid=1271908" இலிருந்து மீள்விக்கப்பட்டது