பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்குச் சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே? நீங்களே வந்திருந்தால் இப்போது இந்தச் சங்கடங்களெல்லாம் இருந்திருக்காதே?”

“வாஸ்தவந்தான். வேறு யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவியாயிருக்கலாம். அவங்க தப்புச் செய்தாலும் தட்டிக் கேட்கலாம். நாமே போய்ப் பதவியிலே உட்கார்ந்துகிட்டா சரியாயிருக்குமா? அப்பவே காரியக் கமிட்டி அங்கத்தினர்களில் பெரும்பாலோரும், ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுக்கிட்டாங்க. அடுத்தாப்பலே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வரப் போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியிலே போய் உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்குக் கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?”

“இந்திரா காந்தியை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? அந்த விவரத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“நேருவுக்குப் பிறகு நமக்கு மிஞ்சியிருந்த ஒரே தலைவர் சாஸ்திரிதான். நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன. சாஸ்திரி ரொம்ப சாது. காந்தீயவாதி. நேர்மையானவர். எளிய சுபாவம். அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்த போது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்தச் செய்தியைக்கேட்ட போது ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியல்லே. நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட்டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார், காங்கிரசைக் கலைச்சுடலாம்னு எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச்

15