பக்கம்:சிவஞானம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 1I

கொடியவன் மனம் சிறிதும் இளகாது - இள காது. ஒ ஈசா தாங்களே என்னைப் பாதுகாத்தல் வேண்டும்.......அந்தோ கடவுளும் என்னைச் கண்னெடுத்துப் பாராது இவ்விதம் கைவிடுகின் ருரே !. நான் என் குறைகளை யாரிடம் கூறி ஆறு தல் அடைவேன் ?......... ஆ (துயரத்துடன்) என் நண்பன் ஒருவன் இருந்தான்-அவனையும் என் எசமானன் இவ்விதமே பால் கொடாது புறக்கணித்து வந்தான். அதல்ை, அவன் அடைந்த துயரம் சிறிதன்று. என்னைப் போலவே அவன் நாளுக்கு நாள் உடல் இளைத்துவந்தான். அவனைக் கடைக்கணிப்பார் ஒருவரும் இல்லா தொழிந்தனர் - அந்தோ (அழுதுகொண்டே) சென்ற வாரந்தான்-அவன்-இறந்துபோன்ை ...அது கண்டு நான் மிகுதியும் துன்புற்றேன். அன்று இரவு முழுவதும் நான் கண்ணுறங்கவில்லை. மறுநாள் நான் புறக்கடைக்குச் சென்றேன்.-- ஆ என்ன ஆச்சரியம் இறந்து போன அவன் உயிர் பெற்று முன்னிலும் பன்மடங்கு பருத்து, ஒரு புறத்தே நின்றிருத்தலைக் கண்டேன். அப் போது எனக்கு உண்டான ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நான் மிக்க களிப்போடு துள்ளிக் குதித்து அவன் அருகே சென்றேன். ...... ஐயோ! ஈசனே! அந்த அநியாயத் தை நான் என்னென்று சொல்லுவேன். கண் னிர் வடித்த வண்ணம்)

அது, என் நண்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/18&oldid=563050" இலிருந்து மீள்விக்கப்பட்டது