பக்கம்:சிவஞானம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிவ ஞ | னம்

அவர் கட்டளையை மீறுதற்கு அஞ்சியும், தம் தாய் தந்தையர் தேடி யலை வார்கள் என்று எண்ணியும், அச் சிறுவர்கள் அதற்கு ஒருவாறு சம்மதித்தனர். அவர்கள் அவ்வாறு செல்லும்போது, சிவஞானம் என்னும் சிறுவன் அம்முதியவரைப் பார்த்து, தாதா, நாங்கள் நாளைய தினம் வருகின்ருேம்,' என மொழிந்தான். அப்போது குப்புசாமிப் பிள்ளை, " அப்பா, தன் தாய் இறந்ததை அக்குதிரைக் குட்டி அறிந்தால் அஃது எவ் வாறு வருந்தும் என்பதை நீயே எண்ணிப்பார். நான் அதன் அருகே யிருந்து அதனைத் தேறுதல் செய்ய வேண்டும். ஆதலால், நான் சில நாட்கள் தனிமை யாய் இருக்க விரும்புகின்றேன். ஒரு வாரம் நீங்கள் ஒரு வரும் இங்கு வருதல் வேண்டா,' எனத் துயரத்துடன் இயம்பிஞர்.

அச்சிறுவர்கள், அவர் வார்த்தையை மறுத்துரைத் தற்கு இயலாதவர்களாய், அவரைப் பணிந்து விடை பெற்றுத் தத்தம் இருப்பிடம் ஏகினர். அன்று இரவு அவர்களில் ஒருவனும் வயிருர உணவு கொள்ளவில்லை; பிறரோடு வார்த்தையாடவுமில்லை. அவர்கள் அன்று சீக்கிரத்தில் படுக்கைக்குச் சென்றனர். எனினும் ஒருவ னும் நல்ல உறக்கம் கொள்ளவில்லை. சிவஞானமும், மணிவண்ணனும் அன்று இரவு முழுதும் குதிரையைக் குறித்தும், அதன் குட்டியைக் குறித்தும் ஏதேதோ கணுக்கள் கண்டிருந்தனர்.

நாய்க்குட்டிச் சுவாமியார்

ஐந்து நாட்கள் சென்றன். தன் தாயை இழந்த அக்குதிரைக் குட்டிக்கு அப்போதும் துயரம் நீங்கவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/79&oldid=563111" இலிருந்து மீள்விக்கப்பட்டது