பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருச்சிற்றம்பலம் உமாபதி சிவாசாரியார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண சாரப் பாடல்களில் திருநாவுக்கரசு சுவாமிகளின் தோத்திரப் பாடல் போற்று திருவாமூரில் வேளாண் தொன்மைப் பொருவில் கொறுக்கையர் அதிபர் புகழனர் பால் மாற்றரும் அன்பினில் திலகவதியாம் மாது வந்து உதித்த பின்பு மருள் நீக்கியாரும் தோற்றி அமண் சமயமுறும் துயரம் நீங்கத் துணைவர் அருள் தரவந்த குலே நோயால் பாற்றரு நீள் இடர் எய்திப் பாடலிபுரத்தில் பாழி யொழித்து அரன் அதிகைப் பதியில் வந்தார் வந்து தமக்கையர் அருளால் நீறு சாத்தி வண் தமிழால் நோய் தீர்ந்து வாக்கின் மன்னுய் வெந்த பொடி விடம்வேழம் வேலே நீந்தி வியன் சூலம் கொடி யிடபம் விளங்கச்சாத்தி அந்தமில் அப்பூதி மகன் அரவு மாற்றி அருட் காசு பெற்று மறை அடைப்பு நீக்கிப் புந்தி மகிழ்ந்து ஐயாற்றில் கயிலே கண்டு பூம்புகலூர் அர ன் பாதம் பொருந்தினரே திருச்சிற்றம்பலம்