பக்கம்:சிவ வழிபாடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|L சிவமயம் விநாயகர் துதி (1) இறைவன் எங்கும் இருக்கிறான்; அவன் எப்பொழுதும் இருக்கிறான்; அவன் இல்லாத இடம் இல்லை. நன்மை செய்பவனும் அவனே தீமை செய்பவனும் அவனே. இன்பம் அளிப்பவனும் அவனே பிறப்பு இறப்பு இல்லாமல் மோட்சத்தை அருளுபவனும் அவனே. தூங்குபவர் விழிக் கிறார்கள். அதுபோல் இறந்தவரும் பின்னர் பிறவி எடுப்பர் ஆகையால் பிறவி எடுத்த பயன் மக்களுக்குத் தொண்டு செய்வது இறைவனை இடையறாது தியானிப்பது; ஆகவே நல்லவை செய்ய வேண்டும்; இறைவனைத் துதிக்க வேண்டும். இது எல்லாருடைய கடமை ஆகும். முன்னவனே யானை முகத்தவனே _ முத்திநலம் ΠΤlΙΠΠΗΨΗΠΕ Yaanai mugaththavane muththinalam சொன்னவனே துாய்மெய் சுகத்தவனே _ மன்னவனே ΕΟΠΠΕΙΨΕΙΠΕ thuymey sukaththavane ΓΤΥΞΗΠΓΙΕVΕΠΕ சித்பரனே ஐங்கரனே செஞ்சடையெம் சேகரனே sithparane Ainggarane Segnchadaiyem seagarane தற்பரனே நின்தாள் சரண் tharparane mintha|| SaГаП எல்லாருக்கும் முன் இருப்பவனே! யானையின் முகத்தை உடையவனே! முத்தி பெறுவதால் ஆகிய நன்மையைக் கூறியவனே! பரிசுத்தம் ஆனவனே உண்மையே உருவாக உடையவனே! நிலைத்து இருப்பவனே அறிவுக்கு எட்டாத பரம் பொருளே’ ஐந்து கைகளை உடையவனே! சிவந்த சடையை உடைய சிறந்த கடவுளே! மேன்மையான பொருளே! உன் திருவடியே அடைக்கலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/11&oldid=833335" இலிருந்து மீள்விக்கப்பட்டது