பக்கம்:சீதா கல்யாணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீதா கல்யாணம்

1. கடவுள் வணக்கம்

எந்தக் காரியமானாலும், அந்தக் காரியத்தை எல்லாம் வல்ல கடவுளைத் தொழுத பின்பே ஆரம்பிக்க வேண்டும்.நூலாசிரியர்கள் பலரும், தங்கள். தங்கள் வழிபடு கடவுளையே முதலில் தொழுதல் வழக்கம். ஆனால் கவிச்சக்கரவர்த்தி கம்பரோ, தாம் எழுதிய காவியத்தில், எல்லா மதத்தினர்க்கும் பொதுவான ஒரு தெய்வ வணக்கத்தைச் சொல்கிறார். இந்த உலகத்தையும், மற்றுமுள்ள அண்டங்களையும் உண்டாக்கிக் காத்து அழித் தலையே தனது தினசரி விளையாட்டாகக் கொண்டுள்ள ஒரு பரம்பொருளை நான் வணங்குகிறேன்’ என்பதுதான் அவரது கடவுள் வணக்கம்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்: அன்னவர்க்கே சரண் நாங்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/20&oldid=1367845" இலிருந்து மீள்விக்கப்பட்டது