பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 167 சேர்ந்து சமயம் வாய்த்தபொழுது புரட்சியைக் காட்டிக் கொடுத்து விடாமல் கவனிப்பதற்கும் அவர் களுக்குத் தனி ஸ்தாபனங்கள் அவசியமா யிருந்தன. கம்யூனிஸ்டுகளுக்கு வெளிப்படையாக வேலை செய் வதற்கு உரிம்ை இருந்ததால், காட்டில் தொழிலாளர் சங்கங்களும், குடியானவர் சபைகளும் பெருகி வந்தன. 1925-ஆம் u ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் 800 அங்கத்தினரே இருந்தனர் ; அவ் வருவடிக் கடைசியில் 3,500 அக்கத்தினர் சேர்ந்து விட்டனர். தொழிற்சங்க அங்கத்தினர் தொகை யிலும் விசேஷ் வளர்ச்சி இருந்தது. 1924 மே மீ! 2,70,000 அங்கத்தினரே இருந்தனர் ; 1935, மேமீ 5,40,000 பேர் இருந்தனர். சியாங் கே-வுேக்குக்கு ஆரம்பம் முதலே கம்யூ னிஸ்டுகளைப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. ரஷ்யா வுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதிலும் அவர் ஊக்கமாயில்லை. எலன் யாட்-ஸென் உயிரோடு இருந்திருந்தால் இடதுசாரியினரோடுதான் சேர்ந்து உழைத்திருப்பார் என்று அவர் பத்தினியார் கூவி யுள்ளார். ஆனல் சியாங் வலது சாரியினரிடத்தில் அநுதாபம் கொண்டிருந்தார். அவருக்கு வெளி காட்டுப் பாஷைகள் தெரியாததாலும், வெளிகாட்டுப் பழக்கம் இல்லாததாலும், அவரைச் சுற்றியிருங் தவர்கள் மிகத் தீவிரமான காரியங்களில் பிரவேசிக்க இடங் கொடாத சுயகலப் பிரபுக்களாக இருந்த தாலும், அரசியலைப் பார்க்கிலும் போர்த் திறமையே அந்தச் சமயத்தில் அவருக்கு முக்கியமாகப் பட்ட தாலும் அவர் கம்யூனிஸ்டுகளின் சக்தியையே உடைத்துவிடவேண்டும் என்று முன் வந்து விட்டார். லின் யு-டாங் என்ற புகழ்பெற்ற சீன எழுத்தாளர், அனேக் கம்யூனிஸ்டுகளே சீன ஜனநாயகத்தின் அசைக்க முடியாத அடிப்படையாக விளங்குவார்கள்' என்று சமீபத்தில் கண்டு பிடித்துக் கூறியதை அக்