பக்கம்:சீனத்தின் குரல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

67


இருதரத்தாருக்கும் இருந்த மன வேற்றுமையை இன்னும் அதிகமாக்கிற்று. அன்று முதல் ஷேக்கின் பேச்சில், எழுத்தில், பிரசங்கத்தில், கம்யூனிஸ்டுகள் என்பதற்குப் பதில் கொள்ளைக்காரர்கள் என்றே உச்சரிக்க ஆரம்பித்தார். தலைமைப் பதவி என்றாலே தலைக்கிறுக்கு ஏறி மாற்றுக் கட்சிகளின் உண்மையான பெயர்களை இட்டழைக்காமல் வேறு பெயரை இட்டழைக்கும் சுயநலத் தலைவர்கள் இல்லையா அந்த நோய் ஷேக்குக்கும் பிடித்துக் கொண்டது.

ஒரு சமயம் இந்த சர்ச்சைகளில் ஷேக் இறங்காமல் முன்னாடியே ஏற்பட்ட கூட்டுறவைப் பலப்படுத்தி ஜப்பான் மேல் படையெடுத்திருந்தால் நன்மையாக இருந்திருக்குமோ என்ற அளவுக்கு வந்துவிட்டது அன்றைய சினத்தின் அரசியல் நிலை.

லட்சம் பேர் ஒப்புக்கொண்டனர்

1926-ல் ஜர்மனியில் நடந்த கொமிங்டாங் மாநாட்டில் காலஞ்சென்ற சீனத்தின் சீர்திருத்தவாதி டாக்டர் சன்-யாட்-சன் அரசியல் சம்மந்தமாக தந்த மூன்று தத்துவங்களை தீர்மான வடிவத்தில் எழுதி அதை அந்த மாநாட்டில் கூடியிருந்த ஒரு லட்சம் பேர்கள் ஏக மனதாக ஒப்புக்கொண்டனர். உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் - இவ்வளவு கொந்தளிப்புக்கிடையே 1926 ஜூலை திங்கள் 9-ம் நாள் சியாங்-கே- ஷேக் கொமிங்டாங் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பூ-பெய்-பூ என்ற