பக்கம்:சீனத்தின் குரல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சீனத்தின் குரல்


ஜப்பானியர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. அந்த சந்தோஷமும் நீடித்திருந்ததா,இல்லை.

1946 ஆகஸ்டு 8-ந்தேதி நாகசாகியிலும் அதே திங்கள் 14-ந்தேதி ஹிரோஷிமாவிலும் அணுகுண்டு வீழ்ந்து ஜப்பான் சரணாகதியடைந்து போர் முடிவடைந்துவிட்டது.

மீண்டும் தொல்லை

மறுபடியும் சியாங் கம்யூனிஸ்டுகளின் விரோதியாய்விட வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனத்தில் சியாங்கைவிட, செல்வாக்குப் பெற்றவர்களல்ல கம்யூனிஸ்டுவாதிகள். எனினும் சியாங் செய்த சில பல தவறுகளால் தோல்வியடைய வேண்டிய நிலையும், கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது. ஆகவே ஒரு பக்கம் சியாங்-கே-ஷேக்கும், மற்றோர் பக்கம் மாசேதுங்கும் ஆயுதமெடுத்துப் போராட வேண்டியவர்களாய் விட்டார்கள்.

"சியாங்கே ஷேக்கைத் தலைவராகக் கொண்ட கோமிங்டாங் கட்சி தலை சாய்த்துவிட்டது. தலைமையில் தவறும், தன்னம்பிக்கையில் தளர்ச்சியும், தற்பெருமையில் அளவுகடந்த ஆசையும், தறுக்குமிக்க செல்வர்களின் சுயநலத்தைக் காப்பாற்ற அவர்கள் மக்கள்மேல் எடுத்துக்கொண்ட நடவடிக்கையும், இனி எக்காலத்திலுமே ஒரு முடியாட்சியும், அன்னி-