47 வருமா ? அடக்கம் வருமா ? அவரவர் இயல்பு போல. எனக்கென்னவோ தன்னை மறந்த நிலை-உறக்க | ஒய்வு நிலை-பொறுப்பு நிலை-பொறுமை நிலை. காரோட்டிய அம்மையாரிடம் அவர்கள் ஆங்காங்கு எப்போது வந்தார்கள்? - ஊர் பிடித்திருக்கிறதா ? - எத்தனை குழந்தைகள் ? என்ன செய்கிறார்கள் ?-விலை வாசிகள் எப்படி இருக்கின்றன ? என்று அடுக்கடுக்காய் வினாக்கள் கேட்டேன். அவர்களும் பொறுமையாய் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி வந்தார்கள்? அந்தப் பதிலைக் கேட்கும் போதெல்லாம் சென்னை எங்கே ? ஆங்காங் எங்கே ? வாழ்தல் வேண்டிதானே உற்றார் உறவினரைப் பிரிந்து வந்துள்ளார்கள் ? புதிய சூழலுக்கு ஏற்ப எப்படியெல்லாம் தங்களைத் தமிழ் மக்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் ? ஊரிலேயே இருந்தால் இந்த வளர்ச்சியெல்லாம் ஏற்படுமா ? திரைகடல் ஓடியும் திரவியம் தேடல் தமிழர்தம் தொன்மை மரபுதானே : மேலும் மேலும் தேடாததும் தேடியதைப் பாதகமாக்கு வதும் தேடிய இடங்களில் தமிழையும் தமிழ்க்கலை களையும் போதுமான அளவு நிலைநாட்டாததும்தானே குறை என்றெல்லாம் எண்ணிக் கொண்டே மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தேன். கடைத்தெருக்கள் வந்தன: கடலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் வந்தன. அந்தப் பாதைக்குள்தான் கார்கள் எவ்வளவு விரைவாகப் போகின்றன ! அந்தப் பாதைகள்தான் எவ்வளவு ஒளிமயமாய் உள்ளன நம் சென்னையில் Reserve Bank எதிரில் உள்ள சுரங்கப்பாதை யிலும் மற்ற இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும்கூட எவ்வளவு அழுக்குநீர் அருவிகள்- பிச்சைக்காரர் கூட்டம் ! ஆங்காங் சுரங்கப் பாதைக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு சுங்கத் தீர்வை தரவேண்டும். காசு கொடுத்ததும் ஒரு
பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/51
Appearance