பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 103

நாள் குறிப்பெழுதுதல்

இவரிடம் பாராட்டத் தக்க ஒரு பழக்கம் உண்டு. நாள் தவறாமல் நாள் குறிப்பெழுதும் பழக்கமே அது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அக்குறிப்பில் இடம்பெறும். அவர்தம் இல்லத்தில் குவியல் குவியலாக அந்நாள் குறிப்பேடுகள் குவிந்து கிடந்ததை நாங்கள் கண்டிருக் கிறோம். அக் குறிப் பேடுகள் இப்பொழுது கிடைத்தால் நாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ளத் துணையாகும். அவ்வேடுகள் யாண்டுள்ளன எனத் தெரிந்து கொள்ள இயல வில்லை!

கணக்கில் நேர்மை

நாடோறும் கணக்கெழுதிவைப்பதிற் குறியாக இருப்பார். சில நாளில் இருப்புத் தொகையில் ஐந்து குறையுமாகினும் என்ன செலவு செய்தோம் என்று சிந்தித்துக் கொண்டேயிருப் பார். இரவு எவ்வளவு நேரமானாலும் எழுந்திருக்க மாட்டார். வீட்டார் வந்து, 'நேரமாகிறதே! திட்டக்குறைவு என்று எழுதி விட்டு உறங்கலாமே' என்பர். உடனே அவருக்குச் சினம் வந்து விடும். 'சோம்பேறிப் பயலும் திருட்டுப்பயலுந் தான் திட்டக் குறைவு என்று எழுதுவான். என்னையும் அப்படி எழுதச் சொல்கிறீர்கள்?' என்று வெகுண்டு உரைத்து விட்டுச் செலவான வகையைக் கண்டுபிடித்து, எழுதி விட்டுத் தான் உறங்கச் செல்வார். 'செய்வன திருந்தச் செய்' என்பது கோட்பாடு.

விடாப்பிடி

எதிலும் விடாப்பிடியான குணம் உடையவர். தவறான வற்றில் அவ்வாறு செயற்பட மாட்டார். நல்லனவற்றில் - தமக்குச் சரியென்று தோன்றியவற்றில் -