பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 111

"முடியரசன்! ஏன் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வருவதில்லை?" - சண்முகனார் விடுத்த வினா.

நான் சற்றே உருகி விட்டேன். ஐயா, உங்களை இன்ப மாளிகை யிற் கண்டுகளித்த என் கண்கள், நீங்கள் இச்சிற்றிலில் இருப்பதைக் காணக் கூசுகின்றன. அம்மன வேதனைதான் அடிக்கடி இங்கு வருவதைத் தடை செய்கிறது என்று தயங்கிய வாறு கூறினேன்.

ஒரு பலத்த சிரிப்பு, 'அட! போப்பா, இதெல்லாம் ஒரு விளை யாட்டு, இதற்குப் போய் வருத்தப் படலாமா?' என்று எனக்கு ஆறுதல் சொன்னார். எதையும் தாங்கும் இதயத்துக்கு இதனினும் வேறு சான்று வேண்டுமோ?

நான் சிலையாகி விட்டேன். எனினும் என் நெஞ்சத் துடிப்பு நிற்கவில்லை. அத்துடிப்பு ஒவ்வொன்றும் 'இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன், ஒன்னார் விழையும் சிறப்பு?' என்று நிறுத்தி நிறுத்தி ஒலித்துக் கொண்டிருந்தது.

கலங்கா நெஞ்சம்

ஒரு முறை இன்பமாளிகையின் மாடியின் ஒரு புறத்தே தீ பற்றிக் கொண்டது. அதனையறிந்ததும் வடக்குப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆதி திராவிட மக்கள், 'நம்ம ஐயா வீட்டிலே தீப்பிடித்து, விட்டதே!' என்று அலறிக் கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். உடன் காரைக்குடியிலிருந்து நெருப்பு அணைக்கும் படையினரும் வந்து மறுபுறம் பரவாமல் தடுத்து விட்டனர். ஆதி திராவிட மக்களுக்குச் சண்முகனார், ஆண்டு தோறும் கதராடைகள் வழங்குவதுண்டு. அதனால் - நன்றிப் பெருக்கால் ஓடோடி வந்து அணைத்து உதவினர். இம்மக்கள் விரைந்து வந்து