பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

130 சீர்திருத்தச் செம்மல்

தந்தை - மகனைப் போலப் பாச உணர்வோடு, பயமின்றி, உரிமையோடு பழகினேன்.

அதன் பின்னர், பாவேந்தர், பெரியார், அண்ணா, சோம சுந்தர பாரதியார், கோவை அய்யாமுத்து, திரு.வி.க. முதலான சான்றோர் பெருமக்களுடன் பழகு வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அது ஓர் பொற்காலமாகத்திகழ்ந்தது.

வை.சு. அவர்கள் 'இன்ப மாளிகை'யில் வாழ்ந்தார்கள். அந்த மாளிகை அரண்மனையாகவும் அதில் வை.சு. அவர்கள் மன்னராகவும் வீற்றிருந்தார்கள்.

அந்த அரண்மனைக்கு வராதவர்கள் இருக்க மாட்டார்கள்.

எந்த வேளையில், எத்தனை பேர்கள் வந்த போதிலும், அத்தனை பேர்களும் தங்கி, அறுசுவை உணவு உண்டு, உறங்கிச் செல்வது வழக்கமாயிற்று.

எளியேனுக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது.

ஒரு முறை, "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப வாய்மைக் குடிக்கு." என்ற குறளை எழுதி, அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று எழுதினேன்.

"தம்பி! உன் பாராட்டுக் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி!" என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்கள் வை.சு. அவர்கள்.

1943 முதல் அவர்களின் அமரத்துவத்துககுச் சில மாதங்கள் முன் வரையிலும் எனக்கு ஏராளமான கடிதங்கள் எழுதி யிருந்தார்கள்.