பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 143

கடிதங்கள் எழுதுவது - அதற்கு நகல் எடுத்துக் கொள்வது - பதில் கடிதங்களைப் பதிவு செய்து வைப்பது - அன்றைய செலவுகளை அன்றே கணக்கில் எழுதி இருப்புப் பார்ப்பது - எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்வது - உணவில் கட்டுப்பாடு - உறக்கத்தில் ஒழுங்கு - பிள்ளைகளிடம் அன்பு, அதே நேரத்தில் கண்டிப்பு - எதையும் துணிவோடு சொல்வது, செய்வது இவை போன்ற பல - அவர்களின் கடமைகளாகும்.

செட்டிநாட்டில் சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர்களின் வரிசையில் இவர்களுக்கு முதலிடம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வைராக்கிய மாக எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள்.

காந்தியார் நூற்ற நூலால் செய்த துண்டை அன்றே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தேசப்பற்றைக் காட்டிக் கொண்டார்கள்.

பாரதியார் படங்களை இன்று பார்க்கிறோமே அந்தப் படங்கள் அய்யா அவர்கள் முயற்சியில் எடுக்கப் பட்டவை. பாரதியார் அய்யாவைப் பற்றிப் பாடியபாடல் குறிப்பிடத் தக்கது.

அய்யாவின் அன்பை, விருந்தோம்பலைப் பெறாத தமிழறிஞர்கள் மிகக் குறைவு.அய்யாவின் வீட்டில் நான் மாப்பிள்ளையாக ஆனதற்குப் பெருமைப்படுகிறேன். அவரின் தொண்டுகள் இந்த நூல் மூலம் தமிழகத்திற்குத் தெரியட்டும். இதனை ஆக்குவதில் முனைந் துள்ள உயர்திரு கவிஞர். முடியரசனார் அவர்களுக்கும், திருமதி. பார்வதி ஆச்சி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன்.