பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

159

உருண்டைச் சோறு அளிப்பது, பயனுள்ள - நாட்டுப் பற்று, வீரம் நிறைந்த கதைகள் - நிகழ்ச்சிகள் கூறுவது, இவையனைத்தும் என்முன் நிழலாடு கின்றன. குழந்தைகள் அனைவருக்கும் ஐயா அவர்கள் அளித்த கட்டுக்கோப் பான ஒழுங்கு நெறிகள் இன்றும் என்றும் எங்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ளன.

பிள்ளைகளுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் ஐயா அவர்கள் சண்டைக்குக் காரணமானவரைக் கூப்பிட்டு, ஒரு குண்டூசி கொண்டு வரச் செய்து, அதைத் தமது கையில் சதையில் குத்தி எடுக்கச் சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் கவலையாகவும் வேதனை யாகவும் இருக்கும். எங்கள் அருமை ஐயா அவர்கள் வேதனை யாகச் சிரித்தபடி சொல் வார்கள். "இந்த ஊசி குத்தியது எனக்கு வலியில்லை. நீங்கள் சண்டை போடுவதுதான் வலிக்கிறது" என் பார்கள். குழந்தை களிடையே மறுபடி சண்டைப் பிரச்சினை வராது. தனிப்பட்ட முறையில் பிள்ளைகள் தவறு செய்தால், அந்தப் பிள்ளை முன் பிரம்பால் தம்மை அடித்துக் கொள்வார்கள். 'உங்களைச் சரியாக வளர்க்காமல் விட்ட தவறுக்கு எனக்குத் தண்டனை' என்பார்கள். பிள்ளைகளை வளர்க்கும் விதம், அபரிமித மான பாசம், அப்பழுக்கற்ற அன்பு, மனோதிடம் இவை யாவும் எவரையும் எங்கள் ஐயா பால் ஈர்க்கக்கூடியன.

காலையில் விரைவில் எழுந்திருத்தல், அளவுடன் பகலுணவு கொள்ளுதல், சாப்பிடும் முன் பாரதியார் பாடல்கள், பாரதி தாசனார் பாடல்கள் பாடும் ஒழுங்கு முறைகள் எங்களுக்கு இளம் வயதிலேயே ஐயா அவர்களால் வித்திடப்பட்டவை.

பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட குடும்பத்தினர் உற்றார், உறவினர் இவர்களிடையே குடும்பத்தில்