பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 185.

விட்டார்கள். அதே மாதிரி அவர்கள் வரும் முன்பாகத் தாயார வர்களும் காலமாகி விட்டார்கள்.

உறவினர்கட்கும் நண்பர்களுக்கும் தாயார் பிறந்த வீட்டுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. தாய் வீட்டுப் பங்காளிகள் மறுநாள் பட்டு, இதர சாமான்கள் கொண்டு வந்து விட்டனர். திரு. சொ. முருகப்பா அண்ணனவர்களும் ராம. சுப்பையா அண்ணனவர்களும் இன்னும் சிலரும் முதல் நாளே, தாயார் இறந்த உடனேயே வந்திருந்து சீர்திருத்த முறையில் செய்யத் திட்டம்வகுத்துச் செயல் பட்டனர். முருகப்பா அண்ணன் என்னிடமும் அண்ணனிடமும், "நாளை எல்லாரும் வந்தவுடன் உங்களிடம் வைதீகச் சடங்கு செய்யும் படி கட்டாயப் படுத்துவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. தந்தையாரவர்கள் விருப்பப்படி அவர்கள் சொற்படி தான் நடக்க வேணும், 'அப்பச்சி எழுதியபடிதான் நடப்போம்' என்று கூறி விடுங்கள். மேற்கொண்டு பேசுவார்கள். உங்கட்குப் பயம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால். முருகப்பா அண்ண னிடம் சொல்லுங்கள் என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுங்கள். நானும் பிறரும் மற்ற வற்றைக் கவனித்துக் கொள்ளுகிறோம்" என்று சொல்லி வைத்து விட்டார்கள். அதன்படியே நாங்கள் நடந்தோம்.

பள்ளத்தூர் தாயார்பிறந்த வீட்டுப் பங்காளிகள் மறுநாள் வந்தார்கள் "பந்தல் போடுவதில்லை" என்பதை அறிந்தார்கள். பேசிப் பார்த்தார்கள். ஒத்து வரவில்லை. கொண்டு வந்த பட்டு,இதர சாமான்களை வீட்டில் அப்படியே வைத்துவிட்டு எதிலும் கலந்து கொள்ளாமல் சாப்பிடாமல் கோபம், வேதனை யுடன் சென்று விட்டார்கள். அவர்கள் அனைவருக்கும்