பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

188 சீர்திருத்தச் செம்மல்

வேட்டி கட்டியிருப்பார். இதைப் பார்த்து நல்ல வேட்டியை தந்தையார் கொடுப்பார்கள்.

வாழைப் பட்டையில் மூக்குப் பொடி வைத்து இருப்பார். மடியில் சொருகி வைத்திருப்பதினால் அதை எடுத்துப் பிரிக்கும் போது கொட்டி விடும். கிழிந்து விடும். இதை உணர்ந்த தந்தையார், 4, 5, மூக்குப்பொடி டப்பா வெள்ளியில் செய்து வாங்கி ஒன்றைக் கொடுப்பார்கள். இவர் எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்குத் தவறாது செல்வார். அங்கு "சாமி எனக்கு வேட்டி கிழிந்து விட்டது" என்று கூற வேண்டியதுதான் தாமதம், உடனேயே இவருக்கு யாரும் கொடுத்துள்ள நல்ல வேட்டியை உரிந்து கொடுத்து விட்டு அந்தப் பழைய வேட்டியை இவர் வாங்கிக் கட்டிக் கொண்டு விடுவார். பிறகு அடுத்த நாளே, அந்த ஊரிலோ அடுத்த ஊரிலோ இவர் விரும்பும் வீட்டுக்குச் செல்லுவார். போன உடனேயே இவர் கோலத்தை அந்த வீட்டார் கண்டு வேறு நல்ல வேட்டி கொடுத்து விடுவர்.

மூக்குப்பொடி டப்பாவோ வேட்டியோ இவரிடம் தங்காது. இந்த நிலை அறிந்த பிறகு மூக்குப்bடி டப்பா கொடுப்பதைத் தந்தையாரவர்கள் நிறுத்தி விட்டார்கள். இவர் காசைக் கையில் தொட்டதை யாரும் பார்த்ததில்லை. மற்ற விருந்தினர் சாப்பிடும் இலையை வேலைக்காரர் எடுத்து எறிந்து விடுவது வழக்கம். ஆனால் இவர் சாப்பிட்ட இலையை எங்கள் தாயார்தான் எடுத்துப் போய் வெளியில் போடுவார்கள்.

மிகப் பெரிய வீட்டை இழந்து, கைப்பொருள் அனைத்தையும் இழந்து, ஒரு சிறு பழைய வீட்டில் வசித்துக் கொண்டு, சிரமத்துடன் கேசை நடத்திக்