பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

202 சீர்திருத்தச் செம்மல்

சங்கத்தின் மீது. வேறு பாடல் எதுவும் இப்பகுதியில் இருந்த போது அவர்கள் பாடவில்லை.

8.9.20 அன்று பொதுவாக இந்து மதாபிமான சங்கத்தை முழுமனத்துடன் ஆதரிக்கவும் சிறப்பாகத் தனவணிக குல வளர்ச்சியை ஆதரிக்கவும் "தனவைசிய ஊழியன்" என்ற வாரப் பத்திரிகை தோன்றியது. அதன் ஆசிரியர் சொ. முரு. அவர்கள் தான். அப்பத்திரிகைத் தோன்றிய ஓராண்டுக்குள் ஊழியர் சங்க உறுப்பினர்கள் காட்டிய வழியில் அதற்கு உறுதுணை யாக, நம் இந்து மதாபிமான சங்கம் நின்றதனால், 60 ஆண்டுகளாகக் கூடாது கிடந்த 96 ஊர்க் கூட்டத்தை, அதை இனிக் கூட்ட முடியாது எனப் புரளி பேசியவர்கள் தலை கவிழ்ந்து நம் குறிக்கோளுக்கு இணங்கி வணங்குமாறு கூட்டி வைத்த பெருமையைத் "தனவைசிய ஊழியன்" பெற்று விட்டது.

செட்டிமார் நாட்டுக் கிராமங்களில் பெரும்பாலான ஊர்களில் எல்லாம் நம் இந்து மதாபிமான சங்கத்தின் உறுப்பினர்கள் தொகை பெருகி நின்றது. அவர்கள் உதவி பெற்று, நம் தனவணிக குலத்தில் வெளிநாட்டில் வசித்தோர் உள்பட உள்ள முழுப்புள்ளி, அரைப் புள்ளி, மணமாகாத சிறுவர், சிறுமியர், விதவைகள், குழந்தைகள் ஆண், பெண் அடங்கலுக்கும் ஊர் வட்டகை, கோவில் பிரிவுகள் ஆகிய வற்றை விவரமாக நம் ஊழியர்கள் கணக்கெடுத்தனர்.

15.7.1921 அன்று கோவிலூரில் 96 ஊர்க்கூட்டம் நடந்தது. தனவணிகர்கள் 96 ஊர்களில் வாழ்ந்த காலத்தில் நம் குலத்தவர் மகாநாட்டுக்கு 96 ஊர்க்கூட்டம் என்ற பெயர் இடுகுறிப் பெயராக இருந்தது.