பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 சீர்திருத்தச் செம்மல்

அண்டை மாநிலத்தார் அயர்ந்து, வியந்து பாராட்டும் அளவிற்கு விருந்தோம்பல் பண்பிலே வீறுகொண்டு நிற்கும் நாடு.

அறப்பணிகளா? பிற பொதுப்பணிகளா? எதுவாகினும் அளந்து பார்க்காது, அள்ளியள்ளி வழங்கி, ஆராப்புகழ் கொண்ட நாடு.

கணக்கும் வழக்கும், இரு கண்களாகக் கருதிக் கடைப்பிடித் தொழுகும் நாடு.

ஆம்; அதன் பெயர்தான் செட்டிநாடு. நகரத்தார் (செட்டி யார்) மிகுதியாக வாழ்வதால் அப்பெயர் பெற்றுச் சிறப்புற்று விளங்குகிறது அது.

இந்தியாவில் மாநிலங்கள் பலவிருப்பினும், தமிழ் மாநிலம் ஒன்றுதான் ‘தமிழ்நாடு’ எனச் சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கிறது.

அது போலவே தமிழ் நாட்டிற் பல்வேறினத்தார் மிக்கு வாழும் மாவட்டங்கள் பலவிருப்பினும், நகரத்தார் மிக்கு வாழும் பகுதி மட்டுமே ‘செட்டிநாடு’ எனச் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் ‘நாடு’ என்றழைக்கப்படும் சிறப்புங் கொண்டு மிளிர்கிறது இப்பகுதி.

இத்தகு சிறப்பு வாய்ந்த செட்டிநாட்டில் கானாடு காத்தான் என்ற பெயர் கொண்ட சிற்றூர் ஒன்றுள்ளது.

புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவோர், கானாடு காத்தான் என்ற இவ்வூரைக் கடந்துதான் வருதல் வேண்டும்.

இது சிற்றூராகினும், இந்தியா முழுமையும் தம் பெயர் விளங்கச் செய்த, வெள்ளையரசிடம் செல்வாக்