பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34 சீர்திருத்தச் செம்மல்

யும் 'சமதர்ம' இல்லமும் சுயமரியாதைத் தோழர்களுக்குத் தெற்குக் 'கேந்திர'ங்களாக விளங்கின என்று கூறலாம். எல்லாத் தலைவர்களும் தொண்டர் களும் வந்து தங்கிய பெருமை இவ்விரண்டு மனைகளுக்கும் உண்டு.

இன்ப மாளிகையின் வாயிலில் எப்பொழுதும் இரண்டு மகிழுந்துகள் (கார்கள்) நின்று கொண்டிருக்கும். அவற்றுள் ஒன்றைத் (ஸ்டுடி பேக்கர்) தந்தை பெரியாருக்கு அன்பளிப் பாக வழங்கி விட்டார்.

சண்முகனார் வழங்கிய அம் மகிழுந்துதான், இந்தி எதிர்ப்பின் போது, தந்தை பெரியாரிடமிருந்து அரசாங்கத் தால் பறிமுதல் செய்யப்பட்டது.

குருகுலப் போராட்டம்

வ.வே.சு.ஐயர் என்று எல்லாராலும் அழைக்கப் பெற்ற சிறந்த தேசிய வாதியாகிய வ.வே. சுப்பிரமணிய ஐயர் சேரன்மாதேவி என்னும் ஊரில் 'குருகுலம்' என்ற பெயரில் ஒரு தேசிய நிறுவனத் தைத் தொடங்க முயன்றார்.

அந்நிறுவனத்துக்காக நம் வயி.சு.சண்முகனார் வழங்கிய ஆறாயிரம் உரூவாவுக்குச் சேரன்மாதேவியில் ஐயர் நிலம் வாங்கினார்.

மேலும் அதன் வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்க மலேயாவுக்குப் புறப்பட்டார். குமரன், ஊழியன் என்னும் இதழ்களின் விளம்பரத் தால் பெருந்தொகை சேர்ந்தது. அதனைக் கொணர்ந்து, குருகுலம் தொடங்கி, நடத்தி வந்தார்.