பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 41

தமிழ் நாட்டில், தமிழ் நாட்டு வானொலி நிலையங்களுக்கு, தமிழ் மக்களே தமிழ்ப் பாடல்கள் மிகுதியாக வேண்டு மென்று எழுதலாமா? எவ்வளவு பெரிய 'தேசத் துரோகம்?'

இவ்வாறு தமிழர்கள் வேண்டுமென விழைவது குறுகிய மனப் பான்மையெனவும் 'பாஷைத் துவேஷம்' எனவும் கருதப்பட்டமை யால் இவர்தம் வேண்டுகோள் மடல்கள் குப்பைக் கூடையை நிறைத்துக் கொண்டிருந்தன.

இந்நிலைமையை உணர்ந்த வயி.ச. சண்முகனார் வேதனைப் பட்டார். வேதனை சிந்தனையாக மாறியது. சிந்தனை ஒரு வடிவம் பெற்றது. சண்முகனாரும் அவர் தம் துணைவியார் மஞ்சுளாபாய் அம்மையாரும் சேர்ந்து, செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரின் துணையோடு, 'வானொலி கேட்போர் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தைக் கானாடு காத்தானில் நிறுவிக் கிளர்ச்சி செய்து வந்தனர்.

கிளர்ச்சிகளால் மட்டும் தமிழ்நாடு திருந்தி விடுமா என்ன? அப்படியேதான் இன்றும் இருந்து வருகிறது. அயலவர் ஆட்சிய கன்றது. நம்மை நாமே ஆளும் நாள் வந்தது. உரிமை பெற்று விட்டோம். உரிமைக்குப் பின்னரேனும் உருப்பட்டதா தமிழ் நாடு? மேலும் சில அயன்மொழிப் பாடல்கள் புகுந்து கொண்டதுதான் கண்ட பலன்!

தமிழ் நாட்டு வானொலி நிலையங்களில் வாரத்திற்கு இரண்டு நாள் அதுவும் கால் மணிநேரம் தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டிருக் கிறதென்றால் இதைவிடத் தமிழ் மொழிக்கு வேறென்ன இழிவு வேண்டும்?