பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 81

காலையில் அப்படங்களைக் கும்பிட்டு வணங்கி வருவார்கள்.

சண்முகனார், அவ்வோவியங்களைக் கண்டு மகிழ்ந்து தக்க பொருட்கொடை தந்து உதவினார்.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையவர்கள் எளிமையாக வாழ்ந்த போதிலும் பெருமிதங்குன்றாது வாழ்ந்த பெருமகன். அவர் எவரிடத்தும் பொருள் வேண்டார். எவரேனும் கொள்ளெனக் கொடுப்பினும் கொள்ளேன் என்று மறுத்து விடுவார். இவருக்கு நேரிடையாகப் பொருளுதவி செய்யா விடினும், அவர்தம் நிகழ்ச்சி களுக்காக நன்கொடைகள் வழங்கியிருப்பதாகச் செவி வழிச் செய்தி.

முடியரசன் உறவு

முடியரசனாகிய நான் கவியரசராகிய பாரதியாரைப் பாட்ட னாகவும் பாவேந்தரைத் தந்தையாகவும் கருதி வருபவன். பாட்டனும் தந்தையும் இன்ப மாளிகையில் அமர்ந்தாடிய ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடும் பேறு பெற்றுள்ளேன்.

விடுதலைப் பறவையாகிய பாரதியும் உணர்ச்சிப் பறவை யாகிய பாரதிதாசனும் உரிமையுடன் பறந்து திரிந்த இன்ப மாளிகையில் நானும் பறந்து வந்துள்ளேன்.

அவ்வானம் பாடிகளுக்கு எத்தகைய வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் வழங்கப்பட்டதோ அதே வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் சிட்டுக் குருவியாகிய எனக்கும் வழங்கப்பட்டன. வயி.சு. சண்முகனாரும் மஞ்சுளாபாய் அம்மை யாரும் எனக்குப் பெற்றோர் நிலையிலிருந்து, அன்பு பொழிந்தனர்.