பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 89

அதன்படி நாங்கள் இருவரும் கானாடுகாத்தான் சென்றோம். அப்பொழுது இன்பமாளிகை கைவிட்டுப் போனதால் ஓட்டுக் குடிலில் வாழும் சமயம் அது.

நாங்களும் அம்மையாரும் ஓரறையில் இருந்த பெரிய பெட்டி யொன்றைத் துருவித் துருவி ஆரய்ந்து கொண்டிருந் தோம். நாங்கள் வேறு ஏதோ பணி செய்கிறோம் என்று கருதிக் கொண்டிருந்தார் சண்முகனார்.

பாரதியார் மடல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம்; படிக்கவில்லை. பாடல் தெரிகிறதா என்று பார்ப்போம். இல்லை யென்றால் மடித்து வைத்து விடுவோம். படித்துக் கொண்டிருந்தால் நேரம் ஆகும். இவ்வளவு நேரம் என்ன செய்கிறீர்கள்? என்று அதட்டுவார். அதனால் அஞ்சிக் கொண்டே விரைந்து விரைந்து பார்த்தோம்.

எங்கள் முயற்சி வீண்போகவில்லை. பாடல்கள் எழுதிய தாளொன்று கிடைத்துவிட்டது. அப்பொழுது நாங்களடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே கிடையாது.

'விரைவில் கொண்டு வந்து விடுங்கள்; அதே இடத்தில் வைத்து விடுவோம். ஐயாவுக்குத் தெரிந்தால் சத்தம் போடுவார்' என்று அம்மா சொன்னார்கள்.

இவ்வாறு 'திருடி'க் கொணர்ந்த அப்பாடலை அப்படியே அச்சுக் கட்டை (பிளாக்) எடுத்துக் கொண்டு, திரும்பக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து முன் இருந்தவாறே வைத்துவிட்டோம்.

இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக நாங்கள் நடந்தும், ஐயா அவர்கள், 'என்னப்பா அது? உள்ளே