பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 141

64. நடப்பிச்சுக்கொண்டு சந்திராவுத்தமாக ஆண்ட(னு) பவித்துக் கொள்வதாகவும் இந்தத் தற்மதனை
65. த யாதா மொருவர் பரிபாலனு பண்ணின பேர் காசியிலே தனுக்கோடியிலே கோடி சிவப்பி
66. றதிட்டையும் கோடி பிறம பிறதிட்டையும் கோடி விஷ்ணு பிறதிட்டையும் பண்ணின பலத்
67. தைப் பெற்று இகத்திலே ஆயுராறோக்கியமும் புத்திரமித்திரர்கள் கிறா(யா)தியங்களுடனே தேவேந்திர ே
68. பாகமும் வா(பர)த்திலே வைகுண்ட பதவியும் அடையும் அடைந்திருப்பாறாகவும் இந்த தர்ம
69. த்தை யாதா மொருத்தர் அகிதம் பண்ண நினைத்த பேர் காசியிலே தனுக்கோடியிலே ஸ்ரீ
70. கத்தி கோகத்தி பிறமகத்தி பண்ணின தோஷத்தை அடைந்து இகத்திலே மகத்தான துன்ப
71. த்தை அனுபவித்து ஆத்தியத்திலோ சுவரவாதி நரகத்துக்கு ஏதுவாய் போவாறாகவும்
72. .....
73. இந்த தற்மசாதன பட்டையம் எழுதினேன் ராயசம் தற்மராய
74. குமரன் சொக்கு கைஎளுத்து.

5. மாங்குடி செப்பேடு

இந்த செப்பேட்டை வழங்கியவர் மன்னர் விசைய ரகுநாத பெரிய உடையத் தேவர் ஆவார். இதனை கி.பி.1796-ல் தருமபுரம் ஆதினம் சிவஞான தேசிகரது சீடரான காசிவாசி சடையப்ப தம்பிரான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காசியில் ஏற்கனவே மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவரால் நிறுவப்பட்டுள்ள மடத்தில் அன்னதானம், அபிஷேகம் மற்றும் விசுவநாத சுவாமி விசாலாட்சி அம்மன் பூஜை, நெய்வேதனம் ஆகியவற்றிற்காக துகவூர் பகுதியில் உள்ள புதுக்குளத்தையும், திருப்புத்துர் வட்டத்தில் உள்ள மாங்குடி ஆகிய இரண்டு ஊர்களை தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணம் இது.

1. ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹாமண்டலேசுபரன் அரியராய தழவி
2. பாடன் பாசைக்குத் தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு
3. கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாச்சாரி
4. யன் சோழ மண்டல பிரதிஷ்ட்டாபனாசாரியன் தொண்ட
5. மண்டல சண்ட பிரசண்டன் யீளமுங் கொங்கும் யாள்ப்பா
6. ராயன் எம்மண்டலமுங் கொண்டு கெஜவேட்டை கொண்டருளிய
7. ராசாதி ராசன் ராசபரமேசுவரன் ராச மார்த்தாண்டன் ராசகு
8. லதிலகன் ராச கம்பரன் ராச கண்டரன் ராசாக்களி தம்பிரசா
9. ன் அரசராவணராமன் அந்தம் பிரகண்டன் ரத்தின கிரீடாதிபதி
10. ரத்தின சிங்காசனாதிபதி சூரிய குலதுங்கன் சந்திரகுல திலகன்