பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


செய்துள்ளார். வரலாற்றுச் சான்றுகளை எவ்விதம் ஆய்வு செய்து எத்தகைய முடிவு மேற்கொண்டுள்ளார்பார்த்தீர்களா? கி.பி.1772-ல் முத்து வடுக நாதர் காலமாகிவிட்டார். உண்மை, முக்காலும் உண்மை. கி.பி. 1782-லும் கி.பி.1794-லும் அல்லவா அவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளில் சிவகங்கையில் மன்னர்கள் இல்லையா? ஆமாம். இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கையில் மருது இருவர் ஆட்சி நடந்தது என்பதை நிலை நாட்டத்தானே ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி மருதிருவருக்கு விசைய ரெகுநாத பெரிய உடையாத் தேவர் என்ற சிறப்பு பெயர்கள் இருந்ததா...? இல்லையே! ஆமாம் என்று எழுதிவிட்டால் பிரச்சனையே இல்லாது போய் இருக்கும் மருது இருவர் வழங்கிய பட்டயங்கள் என்று யாரும் எளிதில் சொல்லிவிடுவார்களே!

களவுத் தொழில் ஈடுபட எண்ணியவன் முதலில் தலையாரி வீட்டில் கைவரிசை காட்டினான், என்பது மறவர் சீமையில் வழங்கும் பொது மொழி. கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை தொடர்ந்து இருபத்து ஒரு ஆண்டுகள் மருதிருவர் சிவகங்கை மன்னராக இருந்தனர் என்று தொல்லியல் சாசனங்களைத் துணைக்கு எடுக்கப்போய், தென்னைமரத்திலே ஏறியவனுக்கு தேள் கொட்டிய கதையாக நூலாசிரியர் சொல்லக்கூடிய அந்த இருபத்து ஒரு ஆண்டுகால கட்டத்தில் வேறு ஒருவர், மருது பாண்டியர் அல்லாதவர், சிவகங்கை மன்னராக இருந்தார் என்ற உண்மை, பொய்யையும் சரித்திரப்புரட்டையும் புழுதியிலே புரட்டிவிட்டு பூதாகரமாக எழுந்து நிற்கிறது. அந்த மன்னர் யார் தெரிகிறதா? அவர் தான் சிவகங்கை இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர், அவரது அரசு பெயர்தான் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் ஆவார். 'அரசு நிலையிட்ட, 'விசைய ரகுநாத" என்ற பொதுவான சிவகங்கை மன்னர்களது விருதுகளுடன் அவரது இயற் பெயரான பெரிய உடையாத் தேவர் என்பதும் சேர்ந்ததுதான் இந்த அரசுப் பெயர். நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள இரண்டு செப்பு பட்டயங்களில் மட்டுமல்ல. இந்த மன்னர் ஏராளமான அறக்கொடைகளை 'அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர்' என்ற பெயரில், கி.பி.1800-ம் ஆண்டுவரை வழங்கி உள்ளார். அவர் வழங்கியுள்ள செப்பேடுகளில் சிலவற்றின் உண்மை நகல்களும் இந்த நூலில் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கம்: 303

"பதினைந்து வயதான துரைச்சாமி கடைசியாகப் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார். அவரை பற்றிய கடைசிச் செய்தியைத் தருவது பேராசிரியர் ராக்கப்பனின் அறிக்கை. அதன்படி துரைச்சாமி எந்த வாரிசுதாரையும் விட்டுச் செல்லவில்லை. எனவே கி.பி.1821-ல்