104 கலங்கும் மனம் தெளிந்து, நபி கலைமலர் முகம்நோக்கி, கண்கன் நாணி, விளங்கினம் ஒத்து, எவரோடும் மொழியாது தனியெழுந்து விரைந்து-போளுள், நபிகள் நாயகம்: அவர்கள் உரைத்த நற்கருத்தை, முன்புள்ள மூன்று வேதங்களையும் கற்றுத்தேறிய உத்பாளினால் மறுக்க இயலவில்லை. கலங்கிய மனம் தெளிந்து, முகம் நாணி, எழுந்து, அபூஜஹில் வீற்றிருந்த சபையின்கண்சென்றாள். உத் பாவைக் கண்டதும், அவன் தன் முகத்தோற்றத்தைப் பார்த்த அபூஜஹில், என்ன, நீயும் தோற்றயா? என்று கேட்டான். "முகம்மது சொல்வது உண்மை நிறைந்த வேதவாக்கு. அதை யாராலும் மறுக்க இயலாது, ஏன், வானவர்களாலும்கூட முகம்மதுதம் உரையை மறுக்க வியாலாது என்றால், நான் சொல்ல என்ன உண்டு எனப் புகன்றான் உத்பா, ...முகம்மதுசொற் கெதிராக அமரராலும் விள்ளரிது இந்நிலத்திலெவர் எதிர்உரைப்பர் என்பது உமறுவின் பாட்டு. எனும்மொழியை இயம்பினானே. வேதங்களையும், வேத சாரங்களையும் முறையே கற்றுத் தேர்ந்த உத்பா சென்று, கண்டு, உவந்து, வந்து சொன்ன வாசகம், அபூஜஹிலைத் திருத்தவில்லை. 'உமறிப்பினுகத்தாப் என்கின்ற, மாவீரரையே முகம்மது மடக்கி வெற்றி கண்டிருக் கும் போது, இந்த உத்பா எம்மாத்திரம்" என்று கூறி, முகம் மதைக் கொன்றொழிப்பதே முறை, அதற்கானவற்றைச் செய்வேன், காண்பீர் என வீறுரை பகர்ந்து, வீம்புபேசினாள். என விளக்குகின்றார், கெடுமதியன் அபூஜஹிலின் சீற்றத்தைப் புலவர் உமறு. தீயோர்கள் திருந்துபவரல்லர். தீய்ந்து ஒழியவேண்டியவர்களே என்பது நியதி. தீயோருகிய அபுஜஹில், "தீர்த்துக் கட்டுவேன் முகம்மதை” என்று பேசி, தனக்குத்தானே தீங்கு தேடியவனாகி, முடிவில் இற்றொழி கின்றான்.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/105
Appearance