118 அறிவிலார்களையும் சிறுவர்களையும் தேடி நாடிக் கண்டு, நபிகள் நாயகம் அவர்களைப் பித்தனென்று புகன்று, நமது மார்க்க நெறிக்கு மாறு செய்பவர் எனப் பகர்ந்து, கல் கொண் டெறியுமாறு பணித்தான், நாளை நரகினிடை எரிபட உள்ள இப்னுஅப்துயாவில் என்பான் என்கின்றார் புலவர் உம. இவ் வஞ்சகன் உரைப்படியே செய்தனர் ஏதுமறியா அம்மற மாக் கள். அவர்கள் எறிந்த- கல்வினால்உரம் சிரம்கரம் கால்மூகம் காணா(து) எல்லவன் கதிர்பொழிந்தெனப் பலதொடுத்து எறிந்து சொல்லொணாப் பெரும்பாதகம் விளைத்தளர் சூமர் என மனம்நொந்து பாடுகின்றார் புலவர்உமறு, எல்லவன் கதிர் பொழிந்தெனப் பல தொடுத்தெறிந்தார் என்பது நல்ல உவ மானம். சூரிய ஒளி இடைவிடாது பொழிவது போன்று, சற்றும் இடைவெளியின்றிக் கல்லெறிந்தனர் என்பது கருத்து. அவர் கள் எறிந்த கற்களினால் மார்பு, தலை,கால்,கை,முகம் எங்ங ணும் காயங்கள் உண்டாயினவாம். இவைகளேயன்றி, நபிகள் நாயகமவர்களின் முழந்தாளில் ஓர்கல் ஏறுபட்டு, ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் என்று பாடி, படிப்போர் கண்களைக் குள மாக்குகின்றார் உமறு. இப்படி, ஊரைவிட்டு வெளியிற் செல்லும் வரை அடித்து விரட்டினராம். அடிபட்ட உபாதையினோடு, நக ரிற்கு வெளியில் உள்ள ஒரு பழத் தோட்டத்தினுள்ளே வந்து அமருகின்றார்கள் நாயகப் பேரொளி அவர்கள். காயமுறக் கல்லால் அடிப்பட்ட துன்பம், பசியினால் வயிற்றினுள் ஏற்படும் உளைச்சல், நடந்த களைப்பினால் ஏற்பட்ட உடம்பின் சோர்வு ஆகிய இவை அனைத்தும், மாநபி என்கின்ற பேறும், பட்டமும் வழங்கிய எல்லாம்வல்ல 'இறைவனில் நாட்டத்தால் நடப் பனவே எனக் கொண்டு, அமைதி கண்டு, அத்தோட்டத்தில் இருந்தார்கள் நாயகமவர்கள் என்கின்றார் புலவர் உமறு.
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/118
Appearance