122 பள்ளி வாசலில் வணக்கம் புரிவதை ஹஜ் என்னும் சொல் குறிக்கின்றது. இந்தநாளில், உலக முஸ்லிம்கள் ஒவ்வொரு வரும், ஹஜ் செய்வதைத் தமது கடமையாகக் கொண்டுள் ளனர். அந் நாளில், மொத்த அரபி நாட்டு மக்களின் புனித விழாவாக மட்டுமே ஹஜ் விழா திகழ்ந்தது. நபிகள் நாயகம் அவர்கள் தாயிப் நகரம் சென்று மீண்டபின், அவ்வாண்டின் ஹஜ் விழா ஆரம்பமாயிற்று. அரபு நாட்டின் நான்கு. பக்கங்களிலிருந்தும் மக்கள் வந்து மக்கமா நகரிலே கூடலா யினர். அவர்களைச் சந்தித்துத் தமது கொள்கைகளை நபிகள் நாயகம் அவர்கள் எடுத்துரைத்து விடாதவாறு அபூஜஹிலின் கூட்டம் பார்த்துக் கொண்டது.முகம்மதைப் பார்க்காதீர்கள். அவருரையைக் கேட்காதீர்கள்" என், அபூஜஹில் கூட்டம் செய்த பிரச்சாரமே, 'நபிகள் நாயகம் அவர்களைக் காண வேண்டும், அவர் தம் உரையைக் கேட்க வேண்டும்' என்ற ஆவலைத் தூண்டுவதாயிற்று. மதினமா நகரிலிருந்து வந்திருந் தோரில் சிலர், ஓர் நாள் நள்ளிரவிலே, யாரும் அறியா வகையில் சென்று நபிகள் நாயகம் அவர்களைச் சந்தித்தார்கள். நாயகத்திருமேனி அவர்கள் கூறிய மார்க்க நெறி, அவர்கட்கு. மிகவும் பிடித்திருந்தது. எனவே, அதனை ஏற்று முஸ்லிம்களாக அவர்கள் ஆகி விட்டனர். தம்மூர் திரும்பிய அவர்கள், அடுத்த ஆண்டில்,மேலும் சிலருடன் வந்தார்கள். முன்போலவே ரகசியச் சந்திப்பு நடந்தது. அவர்களும் முஸ்லிம்களான தோடன்றி, நபிகள் நாயகம் அவர்களையும், அவர்கள் தம் தோழர்களையும், தமதூருக்கு வந்து விடுமாறு அழைப்பும் விடுத்தனர். அவர்கள் தம் அழைப்பை நாயகத் திருமேனி' அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஹஜ் விழா முடிந்த பின்னர், நபிகள் நாயகம் அவர்கள் தமது தேர்ழர்களை, இருவர், மூவர், நால்வர் என இரவு வேளைகளில், யாரும் அறியா நிலையில், மதினமாநகர் சென்று குடியேறி வாழுமாறு அனுப்பலானார்கள். இதை அறிந்தபோது அபூஜஹில், கடும் சீற்றம் அடைதான். உடனே தன் ஆதரவாளர்களைக் கூட்டி, ‘இவ்வாடத காரியம் செய்கின்ற முகம்மதை என்ன . , ,
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/122
Appearance