124 மந்திரப்பொருளாய்க் குலநலம்தழைக்க மாற்றம்ஒன்று உரைமின்க ளென்ன, நிந்தையும் படிறும் கொலையும் உள்அமைத்த, நெஞ்சினன் அபூஜஹில் உரைத்தான். "நபிகள் நாயகம் அவர்களை மதினமாநகரம் சென்று விடாமல் தடுக்க வேண்டும். இல்லையேல், நாம் அனைவரும் அழிவது திண்ணம்" என்பதாகத் தனது நீண்ட உரையிலே அபூஜஹில் குறித்து விளக்கினான் என்று இப்பாடல்கள் மூலம் உமறுப் புலவர் நயம்பட விளக்குகின்றார். அபூஜஹில் உரை யைக் கேட்ட அவன் தன் ஆதரவாளர்கள். "தலைவர் கூறுவது நடக்கும் நடக்கும்” எனக் கூறி, ஆமோதித்தனராம். 'ஆமோதித்துப் பயனில்லை, என்ன செய்யலாம்? என்பதைக் கூறுங்கள்" என்று கோரினான் அபூஜஹில். <f "ஒரு வீட்டினுள் முகம்மதைப் போட்டுப் பூட்டி, அன்னம் தண்ணீர் வழங்காமல், பட்டினி போட்டுக் கொல்லலாம்" என்றான் ஒருவன். இதை அபூஜஹில் ஒப்பவில்லை. காரணம், இப்படிச் செய்தால் சாவதற்கு அதிக நாள் ஆகும். அதற்குள் செய்தி மதினமாநகருக்கு எட்டிவிடும். பின்னர்க் காரியம் கெட்டு விடும் என்பது அபூஜஹில் கருத்து. "ஒட்டகையின் மீது வைத்துக் கட்டிக் காட்டினுள் அனுப்பிவிட்டால், அங்குள்ள கொடும் விலங்குகள் கொன்று தின்றுவிடும்." இது இன்னொருவனின் ஆலோசனை. இதனையும் அபூஜஹில் மறுத்தான். பின்னர் அனைவரும் ஒருமித்து, அபூஜஹிலை நோக்கி, "தலைவரே! நீங்களே உரையுங்கள்” என்றனர். அபூஜஹில் உரைகின்றான். வங்கிடத்தொருவர் படைக்கலம்எடுத்து, முகம்மதைப் பொதுவுற வளைந்து, செங்கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கிச் சின்னபின்னம்பட. உடலில்
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/124
Appearance