128 இக்கூற்றை ஆதரித்து மேலும் ஒருவன் புகல்கின்றான் முகம்மது இந்நேரம் நம்மை ஏமாற்றிவிட்டு, வீட்டினின்றும் செமளியேறிச் சென்றிருக்கவும் கூடும். அவ்வளவு வல்லமை அவருக்கு உண்டு" என்பதாக. இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர்அறிகுவர்? வளைந்தவரின் கல்சுகம்குழைய விலங்கினம் மலையக் கற்றிடும் மாயமந்திரத்தாள்..... இப்படி, கற்பனை நயத்துடன், தமது தோழர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்குக் கெடுமதியாள் அபூஜஹில் வருகின்றான்; தன் தோழர்களை அதட்டிஅடக்குகின்றான். 'இது போன்ற வெற்றுரையை விடுமின். நித்திரையைத் துறமின். பதின்மர் பதின்மராகப் பிரிந்து நில்மின். ஒருவருரிக்க ஒருவர் எழுந்து நானா பக்கமும் சுற்றிவருமின். எவ்வழியினும் விழி வைத்திடுமின். இவ்வீட்டைத் தவிர்த்து ஒளிந்து கொள்ளும் இடம் வேறில்லை முகம்மதுக்கு. இனி முகம்மதுமாமதினா காண் பது அரிது. புதிய மார்க்கம் புகல்வதும் விரிப்பதும் இன்றோடு தீர்ந்தது என வீறுடன் மொழிந்து; தானும் மகிழ்ந்து, தனது தோழர்களையும் மகிழ்வில் ஆழ்த்தினான் வருவது அறியானாகிய அபூஜஹில்! உரப்பியஉரைகள் மறுத்துநித்திரையை ஒழித்திடும் திசைதிசை பதின்மர் இருப்பிடம்பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழிபரப்பும் கரப்பிடம் இனிமற்றில்லை மாமதீனாக் காண்பதும் அரிது அவன்மார்க்கம் விரிப்பதும் ஒழிந்ததுஇன்று, என உரைத்து வீறுடன் அபூஜஹில் இருந்தான். இது ஆணளத்தரசனான 'அபூஜஹில் கூற்றாக தரும் உயர்தமிழ்ப்பா. ஆணவத்தை அடுத்து உமறு வருவது
பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/128
Appearance